Tuesday, April 21, 2009

Poems from my daughter Meena

என் மகள் மீனாவின் ஆறாம் வகுப்பு டீச்சர், 20 கவிதைகள் எழுதும்படி வீட்டுப் பாடம் கொடுத்து விட , ஆரம்பித்து விட்டாள் பவர் பாய்ண்ட்டில் கவிதை மழை பொழிய. அவற்றில் சில இங்கே...



Thursday, April 16, 2009

எழுத மறந்த டைரி குறிப்புகள்

தினம் வாங்கிய திட்டு
கடலை மிட்டாய் கணக்கு
பக்கத்து வீட்டு வனிதாவுடன்
ஓடிப் பிடித்த விளையாட்டு
வெற்றி பட்டியல்
எனத் தொடங்கிய
குழந்தைப் பருவ டைரி குறிப்புகள்

பார்த்த படங்களின் விமர்சனங்கள்
மனம் கவர்ந்த மங்கையரின்
ரகசிய பெயர் குறிப்புகள்
என விடலை பருவம் அடைந்து

கல்லூரி லேப்பில்
இரவல் பென்சில் வாங்க
என்னை அவள் அணுகிய
தருணம் தொடங்கிய
காதல் கவிதை தொகுப்பு
என வாலிபம் பெற

பின்னாளில்
சலவைக் குறிப்பு கூட
எழுத மறந்த மௌனம்
உண்மையின் உபத்திரவத்திற்கு பயந்து
ஒரு நல்ல நண்பனுக்கு
நான் இழைத்த
துரோகம்!

டைரியில்
எழுத மறந்த குறிப்புகள்
நான் ரசிக்க மறந்த
நாட்களின் தொடக்கங்கள்..

Sunday, April 05, 2009

பாலம்

ஊரை ஒட்டாமல்
சற்றே தள்ளி உயர்ந்திருந்தது
புதிய பாலம்!
தண்ணீர் காணாத தாகத்தில்
புதுப் பாலம்
எதெற்கென விழித்திருந்தனர்
ஊர் மக்கள்!

இமயத்தையும் குமரியையும்
சாலையில் இணைத்த
பெருமையில்
அர்ப்பணிக்க வந்தார்
கல்வெட்டு நாயகர்!

தண்ணீர் தராத மாநிலத்தை
தரையில் இணைக்க தகாதென
ஊர் திரள
ஒடியது அங்கே
இரத்த ஆறு!

உள்ளம் இணையாத மக்களின்
ஊர்களை இணைத்த
வெட்கத்தில் குறுகியது பாலம்!
அதை படமெடுத்து
நாளைய சரித்திர சாட்சியாக்கியது
நாசா விண்வெளி.