விமானத்தில் பறக்கும் போதும் , ஓய்வறையிலும் ( அமெரிக்க ஆங்கிலப்படி) மட்டும் தான் அதிகம் சிந்திப்பதாக நண்பர் ஒருவர் சொன்னாது , விமானத்தில் செல்லும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்து விடும். பல வருடங்கள் கழித்து , அலுவல் நிமித்தமாக பயணம். பக்கத்து இருக்கையில் ஹாலந்து நாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர். குசலம் விசரித்து முடித்த பின் , இந்திய ஹாக்கி அணியை பாரட்டியபடி , அவர் கேட்ட முதல் கேள்வியே பதக்கப் பட்டியலில் குட்டி நாடான ஹாலந்து முன்னனியில் இருக்கும் போது , இந்தியா எங்கோ கீழே இருப்பதன் காரணம் என்ன என்பது தான். அரசியல் , விளையாட்டு கட்டமைப்புகளின் நிலைமை , இந்தியர்களின் மன நிலை , கிரிக்கெட்டின் ஆதிக்கம் என்று அலசல் விரிந்தது.நான சில வாரங்களாக குமுறிக் கொண்டிருந்ததை கொட்டித் தீர்த்தேன். என்னுடைய அர்ஜூன்தனமான பதில்களை பார்த்தபின் , உன்னை மாதிரி இளைஞர்கள் ( சத்தியமா , அப்படித்தான் சொன்னார் தம்பிகளா!) ஏன் தாய்நாட்டிற்கு திரும்பி தாய்நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட்டால் என்ன என்று பொட்டில் அறைந்தால் போல் கேட்டார். நான் வழக்கம் போல எனது நீண்ட கால திட்டத்தை சொல்லி , இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு வாய்தா வாங்கினேன்.
அடுத்து பள்ளியில் படித்த ஹாலந்து நாட்டு கதை பற்றி பேச்சு சென்றது. கடல் மட்டத்தை விட தாழ்வாக இருக்கும் அந்நாட்டில் , கடல் நீரை தடுத்து நிறுத்தும் சுவரில் ஏற்பட்ட ஓட்டையை பார்த்த சிறுவன் தன் கை விரலால் அடைத்து இரவு முழுவதும் நின்று நாட்டை பேரழிவில் இருந்து காப்பற்றிய கதையைப் பற்றி சொல்லி , என் ஹாலந்து அறிவை அவருக்கு காண்பித்தேன். இரண்டாயிரம் வருடங்களாக , இப்படி கடல் நீர் உள்ளே வந்து விடாமலும் , உள்ளே உள்ள நீரை கடலுக்கு கொண்டு செல்ல அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் சொல்லி, இத்தகைய இயற்கை சூழலிலும் , இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று பெரிய நாடுகளுக்கு நடுவில் குட்டி நாடாய் இருந்து கொண்டு , பல மொழிகளைக் கற்றுக் கொண்டு வியாபாரம் மூலம் செழிப்பாக இருப்பதாகவும் ஹாலந்து நாட்டுக் கதையை அவர் அளந்தார்.
அடுத்த முறை இந்தியா ஹாக்கியில் ஹாலந்து நாட்டை வெல்லும் போது , கண்டிப்பாக என்னை பற்றி அவர் நினைப்பார் என்று நான் எண்ணுகிறேன்.
Friday, September 10, 2004
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//அடுத்த முறை இந்தியா ஹாக்கியில் ஹாலந்து நாட்டை வெல்லும் போது
அடுத்த ஒலிம்பிக் வர்றதுக்குள்ளார நம்ம நாட்டுல
எல்லாத்துறையிலும் அரசியல் இல்லாம ஒழிச்சு,
எல்லா முடிவுகளையும் நேர்மையா எடுத்து,
திறமை உள்ளவங்களை (மட்டும்) மேல தூக்கிவிட்டு...
அய்யா!!!
இதுக்கு பேருதானுங்ன்க.. பேராசை!!
(ஒரு கனவு தான, அதுக்கு என்ன தடை.. )
என்ன இருந்தாலும், அடுத்த ஒலிம்பிக் ஃபைனல் நடக்கும் போது, உங்களை அவர் நினைக்கனும்னுதானுங்க நானும் விரும்பறேன்!! :-(
பெருசு,(மேல ஏறினவர கீழ எறக்க வேணாமா? :) )
அடுத்து பள்ளியில் படித்த ஹாலந்து நாட்டு கதை பற்றி பேச்சு சென்றது
>>
இந்தக் கதையெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கா - அதுவும் டைமிங்கா!
¯í¸û பேச்சின் போது இந்தியாவின் பெருமைகளையும் சொல்லி இருந்தால் ரொம்பவும் சந்தோஷம் அடைந்திருப்பேன்.
¯í¸û கட்டுறை படித்தபின்பு நாம் ஏன் மற்றவரிடம் இந்தியாவின் குறைகளை மட்டும் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ¯í¸û பேச்சின் போது இந்தியாவின் பெருமைகளையும் சொல்லி இருந்தால் ரொம்பவும் சந்தோஷம் அடைந்திருப்பேன்.
இந்தியாவின் பெருமைகளை ஒரு பத்து நிமிடம் ( எங்க முதல் குடிமகன் ராக்கெட் விட்டவரு , பிரதமர் மெத்த படிச்சவரு, பாதி முன்னனி நிறுவனங்களின் உயிரு இப்ப இந்தியா கையில இருக்கு என்றெல்லாம் சொன்னதை , ஒரு வரியில அர்ஜூன்தனமான பேச்சு என்று குறிப்பிட்டிருந்தேன். அதை கேட்டவுடன் தான் , அப்ப நீ ஏன் இன்னும் இங்க வேலை பார்க்கிற என்று கொக்கி போட்டர் அவர்.)
Post a Comment