Thursday, December 30, 2004

மன்னிப்பு ஏது?

நில மங்கையின்
கண நேர தடுமாற்றத்தில்
இத்தனை பெரிய
அழிவா!!!

கடவுளின்
கோபமென்றும்
பாவத்தின்
பலன் என்றும்
மரணமடைந்த
மாந்தரின்
மதம் பலவும்
ஆருடம் கூறினாலும்

இறந்ததில்
பெரும்பாலும்
"ஏழை" மதம் அன்றோ!

எளியவரிடம்
காட்டும்
கோபம்
ஏளனம் அன்றோ!

அன்னை
என எண்ணி
உன் மடியில்
உறங்கிய உயிர்களுக்கு
உணவளித்த ஒரே
காரணத்திற்காக
உயிரெடுக்க
என்ன உரிமை
உனக்கு?

பண்ணியது
பாவமென்று
காலம் காலமாய்
அலைகளாய்
எங்கள்
காலடியில் விழுந்து
மன்றாடினாலும்
கண்ணீரால்
எங்கள்
பாதங்களை
கழுவினாலும்
மன்னிப்பு ஏது
உனக்கு?

Thursday, December 23, 2004

Ocean's Twelve

மணிரத்தினமும் , இராமநாராயணனும் சேர்ந்து இயக்கிய படம் மாதிரியான ஒரு கலைக் கூத்து.ஆளாளுக்கு மாறி மாறி பேசுவதிலும்,தட தட வென மாறும் காட்சிகளிலும் , மிக கவனமாக கூர்ந்து கேட்டு / பார்த்து புரிந்து கொள்வதற்காக நுனி இருக்கையில் அமர்ந்து பார்க்க வைத்து விட்டது இந்த படம்.( திரையரங்கில் வேறு யாரும் சிரிக்கும் போது , நாம் மட்டும் சிரிக்காமல் இருத்து விடக் கூடாது பாருங்கள்!!!).கடைசியில் பிரபு தேவா மாதிரி உடம்பை வளைத்து நெளித்து திருடும்"இரவு நரி" வில்லனுடன் , எல்கேஜி தனமாக நீ பெரிய திருடனா , நான் பெரிய திருடனா என்று மோதி சப்பென்று முடிந்து விட்டது.எனினும் ஒரு வித்தியாசமான கமல்தனமான படம்.

ஜுலியா "ப்ரெட்டி ஓல்ட் உமன்" ஆகிவிட்டார்.

Monday, December 20, 2004

கருணை கொலை

கடவுள்
காட்ட தவறிய
கருணைக்கு
தவித்த ஜீவன்களுக்கு
உதவ நினைத்த
உள்ளத்தை
கொலை செய்யாமல்
காக்குமா
கருணை கொலை !!!

Saturday, December 04, 2004

முக்தி

காட்டாற்றிற்கு
கடலில் கலக்க
ஏனிந்த வேகம்!

கூவமும் கங்கையும்
ஒன்றாய் கலந்தாலும்
பாவமும் புண்ணியமும்
அங்கு
பிறப்பதோ அழிவதோ
இல்லை என்பதாலா?

வெய்யிலில் வற்றாமலும்
மழையில் வழிந்தோடாமலும்
பருவகாலத்தை நம்பியிருக்காமல்
என்றும் நிறைவென்றிருப்பதாலா?

ஒருசுவை முக்தியென்று
கலப்பதற்கு முன்
மற்றவர்கள் அறுசுவைக்கு வழிவகுக்க
சிறு ஓடை பலவாறாய்
நீ வேகம் தணிந்து செல்வதில்
கிடைப்பது தான்
உண்மையான முக்தி!!!

Saturday, November 27, 2004

(ஏ)மாற்றம்

கதிரொளியை மறைத்து
கருமேக கூட்டம் பரப்பிய
காரிருளைக் கண்டு
கவலை கொள்ளாமல்
கன மழை தருமென
களித்திருந்த மனம்...

காற்றில் கலைந்து போன
கார்மேகத்தை கண்டு
காத்திருந்ததில் ஏமாற்றம் தான்!

எனினும்
வெறும் வானமாய் இல்லாமல்
வெண்மேகமாய் விண் வீதியில் உலா வராமல்
கலைந்து போனாலும்
கார்மேகமாய் வந்ததில்
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

இல்லாத வாய்ப்பைவிட
இழந்த வாய்ப்பில்
ஏமாற்றம் தான்
எனினும்
விதைத்து விட்டு சென்ற
நம்பிக்கையில்
நாளைய கார்மேகம்
நன்றே வருமென
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

Tuesday, November 16, 2004

'ஹாட்மெயில்' சபீர் பாட்டியா

நீண்ட நாட்களுக்கு பிறகு 'ஹாட்மெயில்' சபீர் பாட்டியாவின் (Sabeer Bhatia ) பெயர் செய்திகளில் அடிபட்டது. அர்சூ (Arzoo.com ) அடிபட்டபின், அடுத்த என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்பொழுது ஆஸ்திரேலியாவில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட போது TeliXO.Com மற்றும் மின்னஞ்சல் குப்பைகளை தடுக்க உதவும் உபகரணம் என்று தன் புது முயற்சிகளைப் பற்றி தெரிவித்திருக்கிறார். முதல் வெற்றியை விட , தொடர்ந்த வெற்றி மிக கடினமான விஷயம் தான். பல தமிழ் திரை இயக்குனர்கள் கூட முதல் படத்தை வெற்றிகரமாக கொடுத்து விட்டு , பின் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள திண்டாடுவது போல் தான் இதுவும்.
ஆனால் முயன்றால் முடியாதது இல்லை தானே!!!

Wednesday, October 13, 2004

சிரஞ்சீவி தோசை

சிவாஜி கணேசன் மாதிரி பல அவதாரங்கள் எடுக்கக் கூடிய ஒரே உணவு வகை தோசை தான்.வீட்டில் பெரும்பாலும் சாதா தோசை தான். அவ்வப் பொழுது குழந்தைகளை குஷிப் படுத்த , சின்ன தோசை , வெவ்வேறு வடிவங்களில் செய்து அசத்துவதுண்டு. முறுகல் தோசை மேல் எனக்கு
தனி காதலே உண்டு.

உணவகங்களில் பெரும்பாலும் மாசாலா தோசை மற்றும் ரவா தோசை பொதுவாக காணப்படும். விஜிபி தங்க கடற்கரை மூலம் "குடும்ப தோசை" ரொம்ப பிரபல்யம்.உணவு மேசை கொள்ளாத "குடும்ப தோசை" செய்வதை பார்க்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. நகைச்சுவை துணுக்குகளில் அடிக்கடி பேப்பர் ரோஸ்ட் வந்து செல்லும்.கொஞ்சம் கனமானவர்களுக்கு நெய் தோசை , அசைவ பிரியர்களுக்கு முட்டை தோசை என்று சகலமானவர்களின் ருசிக்கேற்ப பலவகைகளில் கிடைக்கும் தோசை "ஆசை தோசை" என்ற சொற்தொடரில் இடம்பெற்றதில் ஆச்சர்யமில்லை. :)

வழக்கமான உணவு வகைகளில் அலுப்படைந்தவர்கள் வெங்காய தோசை , தக்காளி தோசை என்று எதை வைத்து வேண்டுமானலும் தோசை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பெங்களூரில் இருந்த போது மைசூர் மசாலா தோசை என்று கார சட்னி உள்ளே வைத்து கூம்பு வடிவத்தில் தோசை செய்து , உச்சியில் வெண்ணெய் ( கொக்கு பிடிப்பது போல) வைத்து கிடைக்கும். அதே போல ஆந்திரா தோசை உப்புமாவை உள்ளே வைத்து 2-இன் - 1 ஆக கிடைக்கும்.

அலுவலக நிமித்தம் பயணம் செய்யும் போது , பணத்தைப் பற்றி கவலைப்படாமல் , பயணப்படியின் மேல் பாரத்தை போட்டு விட்டு , நல்ல உணவகம் சென்று ஒரு வெட்டு வெட்டுவதில் அலாதியான சுகம் உண்டு. கடந்த மாதம் ஹைதராபாத் சென்றிருந்த போது , ஒரு மாலை நேரம் , "சட்னி" உணவகம் சென்றிருந்தேன்.புதிதாக என்ன சாப்பிடலாம் என்று உணவு பட்டியலை பக்கம் பக்கமாக தேடிக் கொண்டிருந்த போது , ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிடித்தமான தோசை என்று குறிப்பிடப் பட்டிருந்த தோசை கண்ணில் பட்டது. உடனே நானும் சூப்பர் ஸ்டாராக ஆசைப்பட்டு , அதை வாங்கி சாப்பிட்டேன். எண்ணெய் இல்லாமல் , இட்லி போல ஆவியில் சமைக்கப்பட்டு , ஊத்தப்பம் போல உப்பலாக , ஆப்பம் போல மெத்து மெத்தென்று , இடியாப்பம் போல சுவையாக இருந்தது சிரஞ்சீவி தோசை. வாய்ப்பு கிடைக்கும் போது தவற விட்டு விடாமல் ருசி பாருங்கள் நண்பர்களே !!!

இதன் புகழ் பற்றி இன்னும் தெரிய வேண்டுமானல் கூகிளில் "chiranjeevi dosa" என்று தேடிப் பாருங்கள் அல்லது http://timesofindia.indiatimes.com/articleshow/22857624.cms படித்துப் பாருங்கள்.

Friday, October 01, 2004

எரிமலை எப்படி பொறுக்கும்

எங்க ஊர் எரிமலை ஹெலன்( அந்த கால ஆட்ட நாயகி பேர் மாதிரி இருக்கா?)ஸ் கொஞ்சம் குமுற ஆரம்பித்திருக்கிறது.சிவப்பு மல்லி படத்தில் , சந்திர சேகர் தொண்டை நரம்புகள் தெரிக்க உணர்ச்சி பூர்வமாக "எரிமலை எப்படி பொறுக்கும்" என்று எரிமலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட் சொந்தகாரர்கள் மாதிரி வாயசைத்து செல்வார்.நேரில் பார்த்த போதுதான் , இயற்கையின் உக்கிரம் தெரிந்தது. இப்பொழுதெல்லாம் சீஸ்மோகிராப் வைத்து கிட்டத்தட்ட எப்பொழுது எரிமலை வெடிக்கும் என்று அபாய அறிவிப்பு முன்னெச்சரிக்கை கொடுத்து விடுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் பல மனிதர்கள் எரிமலை மாதிரி அவ்வப்பொழுது வெடித்து விடுகிறார்கள். அதெற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கிடைத்தால் நன்றாக இருக்கும்.
http://www.fs.fed.us/gpnf/mshnvm

Monday, September 13, 2004

கோல்கொண்டா

ஹைதராபாத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் மனைவியிடம் நாளை கோல்கொண்டா போகப் போகிறேன் என்று சொன்னேன். அப்படியா , அங்கேயும் கோல்கொண்டா நல்ல புகழ்பெற்ற ஹோட்டலா என்று கேட்டாள். எனக்கும் சென்ற வாரயிறுதி வரை , கோல்கொண்டா ஒரு ஹோட்டலாக தான் அறிமுகம். சரித்திரத்தில் எப்பொழுதோ படித்த ஞாபகம் , பெயர் பரிட்சயத்தை தந்ததை தவிர , வேறொன்றும் தெரியாது.

இந்தியாவில் சுற்றுலா செல்லும் இந்தியர்களை விட , வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று நாளிதழில் படித்தேன். நம்ம ஊரில் , சுற்றுலா பள்ளி/கல்லூரி காலங்களில் செல்லும் சடங்காகவும் , அலுவலகத்தில் தரப்படும் பயணப்படியை பெற உதவும் ஒரு விஷயமாகவும் மட்டுமே உள்ளது. அதனால் வாரயிறுதியில் சென்னைக்கு சென்று உற்றார் உறவினர்களை பார்ப்பதை விட , ஹைதராபாத் அருகிலுள்ள கோல்கொண்டாவிற்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.

கோல்கொண்டா ஒரு அற்புதமான அனுபவம். கதைகளில் படித்த கோட்டைகளின் பிரமாண்டம் நேரில் இன்னும் பிரமிப்பூட்டியது. இப்பொழுதெல்லாம் , நம்ம வீடுகளில் ஹாலில் இருந்து கூப்பிடுவது , அடுப்பறையில் உள்ளவர்களுக்கு கேட்பதில்லை. ( கேட்பதில்லையா இல்லை கேட்காதது போல் இருந்து விடுகிறார்களா என்று தெரிவதில்லை). ஆனால் 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் வாயிலில் இருந்து கை தட்டினால் 400 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 3 கி.மீ தூரத்தில் உள்ள தர்பாரில் கேட்கிறது. தொலைபேசி இல்லாத அந்த காலத்தில் , ஒரு சுவரின் கடைசியில் பேசுவது , மற்றொரு கடைசியில் கேட்கிறது , இங்கே கைதட்டினால் , அங்கே கேட்கிறது என்று ஓரே acoustics மாயா ஜாலம். தண்ணீர் கொண்டு செல்லும் அதி நவீன அமைப்புகள் மற்றொரு ஆச்சர்யம். காகடியா மன்னர்கள் கட்டிய காளி கோவிலை , பின்னர் வந்த முஸ்லிம் மன்னர்கள் இந்த கோட்டையில் விட்டு வைத்தது , மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.

இரவில் ஒலி ஒளி காட்சியாக , இந்த கோட்டையின் கதையை சுற்றுலா துறை 1 மணி நேரம் விளக்குகிறது. நேரத்தை குறைத்து , இன்னும் சுவை பட நன்றாக இந்த நிகழ்ச்சியை செய்யலாம்.கல்லூரியிலிருந்து சுற்றுலாவில் வந்திருந்த நூற்றுக்கணக்கான இளசுகள் , கத்தி ஆர்ப்பட்டம் பண்ணி ஒன்றுமே கேட்காமல் செய்து விட்டார்கள். இவர்களின் சந்தோஷங்களையும் , யாரையும் கண்டுகொள்ளாத அவர்களின் தனி உலகமும், கத்தலும் , கேலியும் , கிண்டலும் மற்றொரு உலக அனுபவம். கல்லூரி நாட்களில் , பிரிவு உபசார விழாவில் கூட்டமா திரையரங்கிற்கு சென்று கத்தி ஆட்டம் போட்டு , மற்றவர்களை படம் பார்க்க விடாமல் செய்தது ஞாபகம் வந்தது.

கோஹினூர் வைரம் இருந்த இடம் ,மார்க்கபோலோ புகழ்ந்து எழுதிய இடம் என்று , இதன் சரித்திர புகழ் நீண்டு கொண்டே போகிறது.

http://7wondersofhyderabad.com/golkonda-fort/golconda-fort.html

Friday, September 10, 2004

வானம் எனக்கொரு போதி மரம்

விமானத்தில் பறக்கும் போதும் , ஓய்வறையிலும் ( அமெரிக்க ஆங்கிலப்படி) மட்டும் தான் அதிகம் சிந்திப்பதாக நண்பர் ஒருவர் சொன்னாது , விமானத்தில் செல்லும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்து விடும். பல வருடங்கள் கழித்து , அலுவல் நிமித்தமாக பயணம். பக்கத்து இருக்கையில் ஹாலந்து நாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர். குசலம் விசரித்து முடித்த பின் , இந்திய ஹாக்கி அணியை பாரட்டியபடி , அவர் கேட்ட முதல் கேள்வியே பதக்கப் பட்டியலில் குட்டி நாடான ஹாலந்து முன்னனியில் இருக்கும் போது , இந்தியா எங்கோ கீழே இருப்பதன் காரணம் என்ன என்பது தான். அரசியல் , விளையாட்டு கட்டமைப்புகளின் நிலைமை , இந்தியர்களின் மன நிலை , கிரிக்கெட்டின் ஆதிக்கம் என்று அலசல் விரிந்தது.நான சில வாரங்களாக குமுறிக் கொண்டிருந்ததை கொட்டித் தீர்த்தேன். என்னுடைய அர்ஜூன்தனமான பதில்களை பார்த்தபின் , உன்னை மாதிரி இளைஞர்கள் ( சத்தியமா , அப்படித்தான் சொன்னார் தம்பிகளா!) ஏன் தாய்நாட்டிற்கு திரும்பி தாய்நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட்டால் என்ன என்று பொட்டில் அறைந்தால் போல் கேட்டார். நான் வழக்கம் போல எனது நீண்ட கால திட்டத்தை சொல்லி , இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு வாய்தா வாங்கினேன்.

அடுத்து பள்ளியில் படித்த ஹாலந்து நாட்டு கதை பற்றி பேச்சு சென்றது. கடல் மட்டத்தை விட தாழ்வாக இருக்கும் அந்நாட்டில் , கடல் நீரை தடுத்து நிறுத்தும் சுவரில் ஏற்பட்ட ஓட்டையை பார்த்த சிறுவன் தன் கை விரலால் அடைத்து இரவு முழுவதும் நின்று நாட்டை பேரழிவில் இருந்து காப்பற்றிய கதையைப் பற்றி சொல்லி , என் ஹாலந்து அறிவை அவருக்கு காண்பித்தேன். இரண்டாயிரம் வருடங்களாக , இப்படி கடல் நீர் உள்ளே வந்து விடாமலும் , உள்ளே உள்ள நீரை கடலுக்கு கொண்டு செல்ல அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் சொல்லி, இத்தகைய இயற்கை சூழலிலும் , இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று பெரிய நாடுகளுக்கு நடுவில் குட்டி நாடாய் இருந்து கொண்டு , பல மொழிகளைக் கற்றுக் கொண்டு வியாபாரம் மூலம் செழிப்பாக இருப்பதாகவும் ஹாலந்து நாட்டுக் கதையை அவர் அளந்தார்.

அடுத்த முறை இந்தியா ஹாக்கியில் ஹாலந்து நாட்டை வெல்லும் போது , கண்டிப்பாக என்னை பற்றி அவர் நினைப்பார் என்று நான் எண்ணுகிறேன்.

Friday, August 27, 2004

ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் 100வது பதக்கம்

இந்தியா ஒலிம்பிக்ஸில் 100 பதக்கங்களை வென்றது. இதில் 25 தங்க பதக்கங்கள் அடங்கும். முதல் இடத்தில் இருக்கும் சீனாவிற்கு கடுமையான போட்டியாக , இந்தியா விளங்கி வருகிறது.அடுத்த ஒலிம்பிக்ஸில் , இந்தியா முதல் இடத்தை பிடிப்பது உறுதியாகி விட்டது. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் , அரசாங்கம் , வர்த்தக நிறுவனங்கள் , விளையாட்டு கட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள் இவை அனைத்தும் இணைந்து வெல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு , திறமையாளர்களை இள வயதிலேயே கண்டறிந்து கடும் பயிற்சி அளிப்பதும் , வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கும் பரிசுகளும் , சலுகைகளும் வேறெந்த துறையில் அடைய முடியாத அளவிற்கு உயர்ந்த அளவில் இருப்பதுமே. வீணாய் போன கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை தடை செய்தது தான் இந்த அளவிற்கு வெற்றி கிடைத்ததற்கு உண்மையான காரணம்.

பி.கு.
1.நாஸ்ட்ராடமஸ் மாதிரி இதை எழுதி வைத்து விட்டேன். 3979 க்குள் ( நாஸ்ட்ராடமஸ் கணிப்புகள் தொடும் கடைசி வருடம்) கண்டிப்பாக இது நடக்கும்.
2. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு , இது தானா முக்கியம் என்று நினைக்கின்றீர்களா?. உணவு , உடை , உறக்கம் மட்டும் போதாது. அமைதி , கலை, விளையாட்டு , இலக்கியம், சம உரிமை , சுதந்திரம் என்று எல்லாம் இருந்தால் தான் வாழ்க்கை. கடந்த 10 நாட்களக , ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்தா , வேற என்ன நினைக்க தோன்றும். நேற்று கனவில் கூட ஒரு வெண்கல பதக்கம் தான் வந்தது.

Monday, August 23, 2004

ஒலிம்பிக்ஸில் நட்புச் சாரல்

நூறு மீட்டர் அரையிறுதியில் ஜஸ்டின் கேட்லின் (Justin GATLIN ) மற்றும் ஷான் க்ராஃபோர்ட் (Shawn CRAWFORD) இருவரும் இலக்கிற்கு அருகாமையில் வந்தவுடன் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து , ஓடிக்கொண்டிருக்கும் போதே நீ முதலில் செல் என்று பேசிக் கொண்டதை பார்த்து வர்ணனையாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டம் முடிந்தவுடன் , நெஞ்சோடு மோதிக் கொள்வதம் , ஓடுவதற்கு முன் வாழ்த்திக் கொள்வதும் , இறுதியில் ஜஸ்டின் வென்றவுடன் , மகிழ்ச்சியோடு ஷான் வாழ்த்தியதை பார்த்த போது நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.

கர்ட்னி குபெட்ஸ் (Courtney Kupets) கால் காயம் காரணமாக , பதக்க நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படாத நிலையில் , தங்க பதக்கம் வென்ற கார்லி பேட்டர்ச்ன் (Carly PATTERSON ) அவரின் உதவியாளராக , சமனில்லாத பார் ஜிம்னாஸ்டிக்ஸ் ( Uneven Bars) போட்டியில் , கர்ட்னிக்காக பாரில் சாக் தடவி சரிபார்த்த போது நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.கர்ட்னி வெண்கலம் வென்றார்.

டைவிங் அரையிறுதியில் முதல் பனிரெண்டு நபர்கள் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்ற நிலையில் , பதிமூன்றாவது இடத்திலிருந்த சாரா ஹில்டெப்ரண்ட்(Sara HILDEBRAND) கடைசி டைவ் அடிப்பதற்கு முன்பு டென்ஷனின் உச்ச கட்டத்தில் இருந்த போது அவரிடம் ஆறுதலாக பேசி தைரியம் கொடுத்த லாரா வில்கின்சன் (Laura WILKINSON ) , தான் தகுதி பெற்றதை விட சாரா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சியும் , சாராவுடன் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போதும் நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.

100 மீட்டர் வண்ணத்து பூச்சி (100m Butterfly) போட்டியில் முதலிடம் வந்த மைக்கேல் பெல்ப்ஸ்(Michael PHELPS),4X100 தொடர் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை , இரண்டாமிடத்தில் வந்த இயன் குரோக்கர்க்கு விட்டுக் கொடுத்த போது (Ian CROCKER) நட்பு சாரல் அடித்தது தெரிந்தது.
பெண்கள் டென்னிஸ் போல பிரபல்யமடைந்து வரும் கடற்கரை கைப்பந்து ( Beach Volleyball) போட்டியில் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் கெர்ரி வால்ஸ்(Kerri WALSH) மற்றும் மிஸ்டி மே (Misty MAY) இருவரின் ஆட்டம் முழுவதுமே நட்புச் சாரல் தெரிகிறது ( கூடவே ஜொள் மழையும்).

மகேஷ் பூபதி மற்றும் லியாண்டர் பயஸ் இருவரும் முன்னொரு காலத்தில் வெற்றிகளை குவித்ததற்கு காரணமும் இந்த நட்புச் சாரல் தான்.

Friday, August 20, 2004

இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு ஜே!!!

மீண்டும் ஒரு முறை வெண்கலப் பதக்கம் நூலிழையில் தவறிவிட்டது இந்தியாவிற்கு. ஆனால் , கடைசிவரை போராடி தோற்றதில் பெருமிதம் தான். http://www.nbcolympics.com -ல் உடனுக்குடன் ஆட்டத்தின் புள்ளி விவரங்கள் வந்து கொண்டிருந்தது , நேரில் பார்ப்பது போன்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. அலுவலகத்தில் , இந்தியர்களின் குழு மின்னஞ்ல்களிலும் ஆர்வலர்கள் சிலர் , ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஆட்டத்தின் நிலையை தெரியப் படுத்தி வந்தார்கள். பொதுவாக , இது போன்ற மடல்கள் அலுவலை பாதிக்கும், அலுவலக அஞ்சலை பயன்படுத்தும் நெறிக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் பெருசுகள் கூட கொஞ்சம் பொறுமை காத்தார்கள். கடைசி செட்டில், எதிரணியை முறியடிக்கும் வாய்ப்பு நமக்கு அதிகம் கிடைத்தும் , வெற்றி கிட்டாதது , பெருத்த ஏமாற்றமே. முதல் செட்டில் ஆரம்பத்தில் கிடைத்த முன்னணி நிலையை உடனே கோட்டை விட்டதும் , இது கடினமான போட்டியாக இருக்கும் என்பது தெரிந்து விட்டது. எனினும் உலக அரங்கில் , இந்தியாவை தலை நிமிர வைத்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட்டணிக்கு என்றென்றும் ஜே!

விஜய் அமிர்தராஜ் , ரமேஷ் கிருஷ்ணன் போன்றவர்கள் விம்பிள்டன் காலிறுதிக்கு சென்றதை விடவும் ,இந்தியாவை டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு எடுத்துச் சென்றதை விடவும் கிரிக்கெட் மோகத்தில் திளைத்திருந்த இந்தியர்களை டென்னிஸ் பக்கம் திருப்பியதில் பெரும் பங்கு லியாண்டர் பயஸ் / மகேஷ் பூபதி ஜோடிக்கு உண்டு. அதற்கு சிறப்பு காரணம் , அவர்கள் தனியாக உலக தர வரிசைக்கு ஆடுவதை விட , நாட்டிற்காக ஆடும் போது காட்டும் அதீத உற்சாகம் தான்.

Thursday, August 19, 2004

காற்றே நீதானா!

தென்றலாய் தழுவிய நீதானா
சூரைக் காற்றாய் இன்று!

காதல் தீபத்தை வளர்த்த நீதானா
காட்டுத் தீயாய் கருக்கியது இன்று!

காற்றாலையாய் இயக்கி வந்த நீதானா
அறுந்த மின்கம்பமாக்கியது இன்று!

பாய்மர கப்பலாய் செலுத்தி வந்த நீதானா
காகித ஓடமாய் சுழற்றியடித்தது இன்று!

பருவக் காற்றாய் வந்த நீதானா
கண்ணீர் மழைக்கு காரணகர்த்தாவாய் இன்று!

பூங்காற்றாய் வந்த நீதானா
பாலை அனல் காற்றாய் இன்று!

புல்லாங்குழலாய் இசைத்த நீதானா
பேரிரைச்சலாய் இன்று!

சுவசமாய் இருந்த நீதானா
சிதை எரிக்கும் நெருப்பிற்கு துணையாய் இன்று!

Tuesday, August 17, 2004

Rathore strikes silver

Proud moments for all Indians and truely the armed forces once again keeping the flag flying high.

http://us.rediff.com/news/2004/aug/17medal.htm

Union Defence Minister Pranab Mukherjee on Tuesday congratulated double trap shooter Major Rajyavardhan Singh Rathore on becoming the first Indian to win a silver medal in an individual event at the Olympics.
"You have done the armed forces proud and brought honour to India by your performance par excellence," Mukherjee said in a release in Delhi today.
Rathore, who served the army in the Kargil War, won the silver in double trap shooting with a score of 179 to bring India's first medal at the ongoing Athens Olympics Games.

.

Monday, August 16, 2004

மணிப்பூர்

மணிப்பூரில் என்ன நடக்கிறது? இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை திரும்ப பெற சொல்லி , தற்கொலை மற்றும் ஆர்ப்பாட்ட கலகங்கள் ஒரு புறம்.கடத்தல் , பணம் பறிப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேடு , இவற்றை கட்டுப்படுத்த தான் இந்த சிறப்பு அதிகாரங்கள் என்று நியாயப் படுத்தி மற்றொரு புறம்.உச்ச கட்டமாக இந்திய பொருட்களை (?) ஒதுக்கச் சொல்லி போராட்டம் வேறு.

இந்தியா வறுமை கோட்டிற்கு கீழே இருந்தாலும் , வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் , ஒற்றுமையாக பிரச்சனையில்லாமல் இருந்தாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது.வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் எங்கே?. அஸ்ஸாம், நாகாலாந்த் என்று வடகிழக்கு மாநிலங்களிலெல்லாம் எப்படி இந்த பிரச்சனை முற்றி விட்டது. ஆரம்பத்திலேயே கவனித்து , சரி செய்யாமல் விட்டது யார் குற்றம் என்று தெரிந்தவர்கள் யாரேனும் பதிந்தால் நல்லது.

லாட்டரி டிக்கெட்டுகளிலும் , வரைபடத்தில் வட கிழக்கில் எங்கோ ஒரு மூலையில் இந்த மாநிலங்கள் உள்ளன என்பதும் , பொறியியல் கல்லூரியில் வேற்று மாநில கோட்டாவில் படித்த ஒன்றிரண்டு மாணவர்களையும் தவிர , வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி வேறொன்றறியேன் பராபரமே!

இளம் உயிர்கள் , தற்கொலை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அளவிற்கா இந்திய ஜனநாயகம் இருக்கிறது?

Wednesday, August 11, 2004

என்னை திட்டியவர்கள்

ஒரு வாரமாய் ஊரில் இல்லை.காலை 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தவுடன், வந்திருந்த 362 அலுவலக மின்னஞ்சல்களை மேலோட்டமாக மேய்ந்து விட்டு , பின்னால் அசை போட்டுக் கொள்ளலாம் என்று ஆவலுடன் வலைப்பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன். சி(ப)ல பதிவுகளுக்கு 30 , 60 என்று பின்னூட்ட எண்ணிக்கைகளை பார்த்தவுடன், கோடை மழை மாதிரி , எல்லா
வலைபதிஞர்களும் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா என்று படிக்க ஆரம்பித்ததில் , கார சாரமாக ஆரம்பித்த விவாதம் நார சாரமாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

இதிலிருப்பது போலில்லாமல் திட்டு வாங்குவதும் சில நல்ல அனுபவங்களாக அமைவது உண்டு. என்னை திட்டியவர்களை எண்ணிப் பார்க்க , இதை விட சிறந்த சந்தர்பம் வேறு ஏது?

திட்டு வாங்குவது என்றவுடன் , பலருக்கு அப்பாதான் ஞாபகம் வரும்.அப்பாவிடம் விவாதம் செய்து , அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது எனக்கு கை வந்த கலை. எல்லாரும் அவரைப் பார்த்து நடுங்கும் போது , கொண்ட கொள்கையை (?) விடாமல் , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அவரிடம் விவாதம் செய்து கொண்டிருப்பேன். அவர் அப்பொழுதெல்லாம் , "பெரிய லார்ட் வேவல் இவரு. இவர் சொல்றதுதான் சரி..." என்று என்னை திட்டுவார். திட்டுவதில் கூட என்னை லார்ட்-ஆக பார்த்தவர்.

மானாமதுரையில் சிறுவர்களெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த கால கட்டம். ஒரு முறை பெரியம்மா மகனின் உடைந்த மட்டையயும், கிரிக்கெட் பந்தும் எனக்கு பரிசாக கிடைத்தது. ( விடாத கெஞ்சலுக்கு பின்).கிரிக்கெட் மட்டை வைத்திருந்ததால் , நான் வைத்தது தான் சட்டம். தேவிலால் போல நான் கேப்டன் பதவி வேண்டாம் என்று, துணை கேப்டன் பதவி வைத்து கொண்டேன். முதலில் மட்டையடிக்க நான் செல்வது வழக்கம். பந்து எப்படி வந்தாலும் , ஸ்டம்பில் பட்டு விடாமல் , மட்டையை சரியாக பந்து வரும் வழியில் வைத்து , அங்கேயே செத்து விழுந்து விடும் படி கட்டை வைப்பது என் வழக்கம். அடித்து விளையாட தெரியாது. அதனால் ஆட்டம் இழக்காமல் , கடைசி வரை விளையாடி ரன் அதிகம் எடுக்காமல் இருப்பது என் வழக்கம்.நண்பர்களெல்லாம் பொறுமை இழந்து , என்னை அடித்து விளையாட சொல்வார்கள். என்னை நேரிடையாக திட்ட முடியாமல் , "டெஸ்மண்ட் ஹெயின்ஸ்" என்று என்னை அழைப்பார்கள். (பின்னாளில் ஒரு நாள் ஆட்டங்களில் ஹெயின்ஸ் அபாரமாக அடித்து ஆடி , என் பெயரை காப்பாற்றியது வேறு விஷயம்.)

பனிரெண்டாம் வகுப்பு படித்த போது , இயற்பியல் ஆசிரியருக்கு என் மேல் கொஞ்சம் கோபம். வகுப்பு முடிய சற்று நேரம் இருக்கும் முன்னரே , அவர் பாடம் நடத்துவதை கவனிக்காமல் , எல்லா புத்தகங்களையும் பையில் எடுத்து வைத்து , தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு , மணியடித்தவுடன் வகுப்பிலிருந்து ஓடிவிட ஆயத்தமாக உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் , நான் செய்யும் ஆயத்தங்களை பார்த்து , அவர் என்னை "கிளர்வுற்ற எலக்ட்ரான்" மாதிரி , ஏண்டா இப்படி வெளியே ஓட ரெடியா இருக்கே என்று திட்டுவார்.

மற்ற திட்டல்கள் மற்றொரு நாளில்....

Wednesday, August 04, 2004

நரகம்+நம்பிக்கை=முன்னேற்றம்

நரகத்தை நம்பும் நாடுகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் , ஊழல் குறைவாக இருப்பதாகவும் Federal Reserve Bank of St. Louis ஆய்வு அறிக்கை கூறுகிறது.அமெரிக்காவில் 71 விழுக்காட்டினர் நரகம் இருப்பதை நம்புவதாகவும் , அதனால் ஊழல்/தவறு செய்வதை தவிர்ப்பதாகவும் சொல்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கை மதநம்பிக்கைகளை வளர்க்க சில மதவாத நிறுவனங்களால் செய்யப்பட்ட முயற்சி என்று சிலர் குற்றம் சாட்டவும், இந்த பகுதி அறிக்கையில் மாற்றப் பட்டு விட்டது.

நான் குழந்தையாக இருந்த போது , நரகத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வறுக்கும் படங்களையும் , மற்ற கொடுமைப் படுத்தப் படும் படங்களையும் பார்த்து சில நாட்கள் பொய் பேசாமல் இருந்ததுண்டு. அதெல்லாம் சில நாட்களே.... .

சொர்க்கத்திற்கு போனா தனியா போரடிக்கும் . நரகம் என்றால் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் . என்ன ? நான் சொல்றது சரிதானே..


அமெரிக்காவில 71 % நரகத்திற்கு பயப்படுகிறார்களா ???!!!!

Monday, August 02, 2004

கரும் துளைகளை காணவில்லை

தற்காலத்து ஐன்ஸ்டீன் என்றழைக்கப் படும் ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking) ( இவரது உடல் நலக் குறைவு மற்றும் கரும் துளைகள் - blackhole பற்றிய கண்டுபிடிப்புகளால் உலக பிரசித்தம் பெற்றவர்) சில நாட்களுக்கு முன் தனது கரும்துளைகள் பற்றிய கருத்து சிறிது பிழைபட்டது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்பே நம்ம ஊர் அபாஸ் மித்ரா (Abhas Mitra) இதைப் பற்றி கரும் துளைகள் என்பது இல்லவேயில்லை என்று கட்டுரை எழுதியதாகவும் , அப்பொழுது யாரும் அவரது கருத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றும் , அவரை அத்துறையிலிருந்தே மாற்றி விட்டதாகவும் Rediff-ல் படித்தேன். சாக்ரடீஸ் காலத்திலிருந்து , இன்று வரை இதே நிலை தான்.

Monday, July 26, 2004

வலைப்பூ

ஈழநாதனின் நீல நிலவு பரிசு கேள்விக்கு சிரத்தையாக கூகிளில் தேடி பதில் சொன்னதற்கு பரிசாக ( வேறென்ன காரணம் இருக்க முடியும்?) , வலைப்பூ ஆசிரியராக இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்த வார பதிவுகள் வலைப்பூவில்.




Tuesday, July 20, 2004

பணம் படுத்தும் பாடு

5000 கோடி லாட்டரி அடித்திருக்கிறது திரு.லோதாவிற்கு ஒரு நான்கு வரி உயிலால். அதை எதிர்த்து 17 பிர்லாக்களும் ஒரே அணியில்.காந்தியின் நண்பரான GD பிர்லாவின் உறவு வழியில் இப்படி ஒரு குழப்பமா?.

5000 கோடி உயில் எழுத சொன்னால் இவர்கள் என்ன செய்வார்கள்...

ரஜினி : நதி நீர் இணைப்புக்கு 1 கோடி. இமயமலை to சென்னை சாலை போட 4999 கோடி.அடி வாங்கிய ரசிகர்களுக்கு பட்டை நாமம்.
ஜெயலலிதா:குருவாயூருக்கு 5000 யானை.திருவரங்கத்திற்கு பசு மாடு. மற்றதெல்லாம் உயிர் தோழிக்கு.
கருணாநிதி : உடன் பிறப்பிற்கு 1 கடிதம். தமிழுக்கு 1 கவிதை. மற்றதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொது குழு முடிவுப்படி இளைஞர் அணி தலைவர் , புது மந்திரிக்கு ......
அப்துல் கலாம்: கனவு காணும் பள்ளி குழந்தைகளுக்கு எல்லாம்.
விஜய்காந்த்: இலவச சைக்கிள் , சேலைக்கு ஒரு கோடி. புகைப்படம், விளம்பரம் , ரசிகர் மன்ற கூட்டங்களுக்கு மற்றதெல்லாம்.
டெண்டுல்கர்: அவுட்சுவிங் பந்து போட்டு அவுட் ஆக்காமல் , அடிக்கிற மாதிரி பவுலிங் போட்ட பவுலர்களுக்கு , ஒரு பந்திற்கு 1000 ரூபாய் வீதம்.
கமல்: (தோழியர்களுக்கு பிரித்து கொடுக்க 5000 கோடி பத்தாது என்பதால் ..)மார்லின் பிராண்டோ என் அப்பா , சிவாஜி என் அப்பா , எம்ஜியார் பெரியப்பா என்று எல்லாரையும் சொந்தம் கொண்டாடுவது போல , எந்த நடிகர் "கமல் என் அப்பா ( மாதிரி....)" என்று சொல்கிறாரோ அவருக்கு. யாருக்கும்
புரியாத மாதிரி ஆங்கில படங்களை காப்பி அடித்த படம் எடுக்க மட்டுமே இந்த பணத்தை பயன் படுத்த முடியும்

அடிப்படை கல்வி , சுகாதாரம், ஆராய்ட்சி என்று எத்தனையோ துறைகளுக்கு 50000000000.00 ( கோடிக்கு எத்தனை சுழி என்று மறந்து விட்டது)  ரூபாய் எவ்வளவோ உதவும். அத்தனையையும் விட்டு விட்டு லட்டு மாதிரி ஒருவருக்கு ( அந்த ஒருவர் நானாக இல்லாத பட்சத்தில்) 5000 கோடி அதிர்ஷ்டம் நியாயமா?
 
சொக்கா... ஒன்றா இரண்டா 5000 கோடியாச்சே?

ஆமாம் , பிர்லாக்களில் ஒரு பிர்லாவிற்கு ஏன் குமாரமங்கலம் என்று பெயர் வைத்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? 
 

Wednesday, July 14, 2004

வெடிக்காத வெடி

பட்டாசு வெடிக்கும்
என் ஆசை
பட்டுச் சேலை கட்டிய அம்மாவிற்கு
ஏன் புரிவதில்லை?

பட்டுக் கரங்கள்
நெருப்பு பட்டு விடுமென்று
வேடிக்கை பார்க்கச் சொல்லி
வெடிக்க சொல்வது
வேலைக் காரர்களை...

வெடிப்பதை விட
விழும் குப்பையிலும்
வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலும் தான்
இவர்களின் பெருமிதம்!

வெடிப்ப்து நானில்லை என்று
தெரிந்து வெடிக்காமல்
நீ குப்பையில் ஒதுங்குவது
குப்பையை கிளறும்
சிறுவர்கள் பின்னாளில்
வெடித்து மகிழவோ?

சிவகாசி சிறார்களின்
கைபட்டதாலா உனக்கு
சிறுவர்களின் மனம் புரிந்தது?

Monday, July 12, 2004

கோதண்டராம பிரசாத்

சென்ற வாரம் மறைந்து விட்ட எங்கள் கல்லூரி நண்பர் கோதண்டராம பிரசாத்தை பற்றி சுந்தர்ராஜனின் பதிவு வந்து விட்டது.இந்த பதிவு என்னுடைய நினைவஞ்சலி.

ராகிங்கிற்கு பயந்தும் , கடாமுடா ஆங்கிலத்திற்கு பயந்தும் , தமிழ் மீடியத்தில் 12 வருடம் பயின்று விட்டு , தலையில் தண்ணீர் தெளிக்கப் பட்டு வெடவெடவென்று ஆடும் பலிகிடா போல,
மஞ்சள் பை புத்தக/சாப்பாட்டு மூட்டையை தூக்கிக் கொண்டு , 5 நிமிடம் தாமதமாக முதல் நாள் பொறியியல் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். இந்த உலகையே (கல்லூரியையே) கட்டிக் காக்க அவதாரம் எடுத்ததாக நினைத்து,நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடாது அறிவுரை செய்யும் , கடமையுடன் கணிதம் கற்றுத் தரும் , தமிழில் கையொப்பம் இடும் , தி.வீ யின்
வகுப்பு அது. ஏளனப் பார்வையுடன், மேலும் 5 நிமிடம் வெளியே நிற்க வைத்து , நேரம் தவறாமை பற்றி நீண்ட விளக்கம் கொடுத்து மற்ற மாணவர்களெல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்த முதல் பெஞ்சில் வந்து அமரச் சொன்னார்.அங்கே அருகாமையில் தோழமையுடன் KRP என்று அழைக்கப் படும் , அன்பே உருவான கோதண்டராம பிரசாத்.ஆரத்திற்கும், விட்டத்திற்கும் ஆங்கில வார்த்தைகள் தேடும் போது ஆபத்பாந்தவனாய் உதவியவன். பயம் நீங்கி , மெல்ல நாமும் முதல் நிலையெடுக்கலாம் என்ற நம்பிக்கையை வளர்த்தவன்.

முதல் தேர்வில் , இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்ற வரிசையில் அவனையும் , என்னையும் ஒரு முறை வகுப்பெடுக்க சொன்னார் திரு.ஹரிஹரன். நானோ பின்னாளில் படிக்கப் போகிற , பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு எளிய தலைப்பை தேர்ந்தெடுத்து , மேடை பயம் காரணமாக , பேந்த பேந்த முழித்துக் கொண்டு , குரல் நடுங்கி , பிரசவ வேதனையுடன் கடமையென அதை செய்து முடித்தேன். முற்றிலும் மாறாக, பாட சம்பந்தமில்லாத வானியலைப் பற்றி , கொடுக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிகமாக அதி அற்புதமாக பேசி வகுப்பிலுள்ளோர் அத்தனை பேரயும் அசர வைத்தவன்.பாடப் புத்தகம் தவிர மற்ற பொருளிலும் விருப்பத்துடன் படிக்கலாம் என்று என் அறிவுக் கண்ணை திறந்த நிகழ்ச்சி இது.

பொறியியல் கல்லூரியிம் அத்தியாவசிய தேவை காரணமாக எனக்கு கிடைத்த விலை உயர்ந்த சொத்து கால்குலேட்டர் தான். இயற்பியல் வகுப்பில் ,கால்குலேட்டரில் பெருமையுடன் கணக்கு
போடும் போது , அதை விட வேகமாக கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட்டு , என்னை எத்தனையோ முறை அசர வைத்திருக்கிறான் KRP.

அவன் ஒரு வளர்ந்து விட்ட குழந்தை போல கள்ளம் கபடமில்லாமல் , அதி வேகமாக பேசக் கூடியவன்.அவன் பேசிய மொழி தமிழா , ஆங்கிலமா என்று பல முறை குழம்பியது கூட உண்டு.
ராகிங்கில் , நாங்களெல்லாம் பதில் சொல்ல கூச்சப்படும் பல கேள்விகளிக்கு , யாருமே எதிர்பார்த்திடாத , குபீர் சிரிப்பை வரவழைக்கும் குழந்தைதனமான அவனது நீதி நெறி பதில்கள் பிரசித்தம்.

இரண்டாமாண்டில் , நான் மின்னியலும் , KRP மின்னணுவியலும் எடுக்க , எங்கள் நட்பு மெல்ல தேய்ந்து , வெறும் ஹலோ சொல்லும் அளவிற்கு சென்றது

கடைசியாக பார்த்தது , பெங்களூர் இரயில்வே நிலையத்தில்.சூரத்தில் பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்த போது, அதை பொருட்படுத்தாமல் வேலைக்கு சூரத் சென்ற நண்பன் முத்தையாவை
வழியனுப்ப சென்ற போது,அங்கே அப்பொழுது MBA முடித்து விட்டு , அனைவரின் கனவிடமான Infosys-ல் வேலைக்கு சேர்ந்திருந்த KRP அதே உற்சாகத்துடன் வந்திருந்தான்.

பல வருடங்களுக்குப் பிறகு , ஏதோ ஒரு உந்துதலில் , நான்கு வருட சிங்கப்பூர் வாழ்க்கையை உதறி தள்ளி விட்டு, மனைவியையும் குழந்தையையும் இந்தியா அனுப்பி விட்டு ,
அமெரிக்க வந்த போதும், காரில்லாமல் , Driving license/Credit Card இல்லாமல் , நிரந்தர வேலையில்லாமல் , ஏனடா அமெரிக்கா வந்தோம் என்று அனைவரும் நொந்து கொள்ளும் ஆரம்ப கால கட்டத்தில் , நம்பிக்கையை ஊட்டியவர்களில் ஒருவன் "மீண்டும்" KRP. Yahoo groupsல் நண்பர்களைப் பற்றி சுவை பட அவ்வப் பொழது எழுதி வந்த KRP யின் முடிவும் , அதே Yahoo groups-ல் வந்த போது ( இப்பொழுதும் ) சற்றே பிரமை போன்றே உள்ளது.

"தொடர்ந்த உற்சாகம் அறிவின் மிகத் தெளிவான அடையாளம்" என்ற பொன்மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதற்கு KRP தான் சிறந்த உதாரணம்.

Wednesday, July 07, 2004

லு டாப்ஸ்

லு டாப்ஸ் (Lou Dobbs) சிஎன்என்னில் நேற்றைய "Moneyline" / இன்றைய "Lou Dobbs
Tonight" நிகழ்ச்சியை திறம்பட நடத்துபவர். 2001-ல் சிஎன்எனின் "Moneyline" நிகழ்ச்சிக்கு திரும்ப பொறுப்பெடுத்த போது வணிகத்தை பற்றி அதிகம் பேசாமல் , அரசியல்/ பொது நிகழ்ச்சிகளை பற்றி , அதிகம் பேசுகிறாரே என்று நினைத்த போது , அதன் பெயரையே "Lou Dobbs Tonight" என்று மாற்றி விட்டார்கள்.

சமீப காலமாக "Exporting America" அவரது நிகழ்ச்சியில் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு அங்கமாகி விட்டது.சம நிலைப்பாடை எடுக்காமல் , சரியோ/தவறோ அவரது ஒரு நிலைப்பாடான கருத்தை திணிக்கிறாரே (மைக்கேல் மூர் போல) என்று நினைத்து கோபமடைந்ததுண்டு. ஆனால் அவர் சொல்வதிலும் சற்று நியாயம் இருப்பது புரிந்தது.

பொதுவாக நிகழ்ச்சியை வழங்குபவர்கள் , வாதம்/எதிர்வாதம் செய்ய ஒரு கருத்தின் இரு புறம் உள்ளவர்களை அழைத்து , விவாத்தை நடுநிலை தவறாமல் நடத்தி செல்வார்கள். இல்லாவிட்டால் "Meet the Press" Tim Russert மாதிரி ஒருவரை அழைத்து , அவரது நிலைப்பாட்டிற்கு எதிர் நிலையில் இருந்து கேள்விகள் கேட்டு உண்மையான பதிலை வரவேற்பார்கள். ரபி பெர்னார்ட் கூட இது மாதிரி சிறப்பாக செய்து வந்தார் ( அம்மாவிடம் பேட்டி காணும் போது காட்டிய பவ்யம் தவிர).

மைக்கேல் மூர் கருத்தை ஆதரிக்க முடிந்த நம்மால் , ஏன் லு டாப்ஸ் சொல்வதை ஆதரிக்க முடியவில்லை?.(ஜீன்களின் வேலையாக இருக்குமோ?)

குப்பனும் , சுப்பனும் செய்கிறான் என்று , வேலையை கண்மூடித்தனமாக ஏற்றுமதி செய்யாமல் , அவரவர் தொழிலின் தேவைக்கேற்ப செய்ய வேண்டும். தொழிலாளர் , சுற்றுச் சூழல் சட்ட திட்டங்களும் ஏறத்தாழ சமமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப "Most Favored Nation" / Tax System இருக்க வேண்டும்.அப்பொழுது தான் "Global Work Force" என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் இருக்கும்.

Sunday, July 04, 2004

மரண தண்டனை ?

மரண தண்டனை சரியா , தவறா என்ற விவாதம் பற்றியது அல்ல இந்த பதிவு.கல்கத்தா சிறுமியின் கொலை வழக்கு குற்றவாளியின் கருணை மனு பற்றியும், அதைத் தொடர்ந்து விருமாண்டி மாதிரி மரண தண்டனை தேவையா இல்லையா என்று விவாதித்தும் பல பதிவுகள் வந்து விட்டது.அதனால் அதைப் பற்றி இங்கே விவாதிக்கவில்லை.

கருணை மனுவை பரிசீலிக்கும் ஜனாதிபதியின் மன நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். ஒரு உயிர் குறித்து முடிவு எடுப்பது எவ்வளவு கடினமான விஷயம். இது போல் எண்ணற்ற வழக்குகளில் தண்டனை வழங்கும் நீதிபதிகள் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் எவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கும்.

சிறு விஷயங்களில் கூட முடிவெடுக்க திணறும் ,"எண்ணித் துணிக கருமம்" என்ற வள்ளுவரின் வாக்கை என்றென்றும் எண்ணி முடிவெடுத்தாலும், பின்னாளில் தவறான முடிவென்று வருந்தும் என்னைப் போன்ற எண்ணற்றவர்களைக் கொண்ட சமுதாயத்தில் இருந்து தான் இத்தகைய நீதிமான்கள் தோன்ற வேண்டியுள்ளது.

குற்றம் புரிந்தவர் யார் என்று சரியாக கண்டு பிடிப்பதும், குற்றத்தின் அளவிற்கேற்ப தண்டனை வழங்குவதும் மிகக் கடிய பணி. அதை தொண்டென புரியும் , நீதி தவறாத , தண்டனை கொடுக்க அஞ்சாத, சரியான முடிவெடுக்கும் ,கடின சித்தம் படைத்த நீதிமான்கள் , மானிட சமுதாயம் சரியான வழியில் என்றும் சென்றிட மிக மிக தேவை.

Wednesday, June 30, 2004

பாரத் ரத்னா

இந்த முறையும் பாரத் ரத்னா விருது அறிவிக்க(வழங்க) படவில்லை. கொஞ்ச காலம் "லேட்டா லேட்டானவர்களுக்கே" வழங்கப் பட்டு வந்தது. அதற்கு பின் கொஞ்சம் காலா காலத்தில் வந்தது.இப்ப மறுபடியும் மக்கர் பண்ண ஆரம்பித்து விட்டது.மற்ற எல்லா "பத்ம" விருதுகளுக்கும் எளிதாக தேர்வு செய்ய முடியும் போது (சுலுவா ஆள் கிடைக்கும் போது ), இதற்கு மட்டும் என்ன கஷ்டம்?.எல்லா விருதுகளுடன் இதனையும் அறிவித்தால் ,இதற்கான மதிப்பு குறைந்து விடுமோ?.நோபல் பரிசு மாதிரி வருடா வருடம் , கண்டிப்பாக "பாரத ரத்னா" விருது வழங்க எப்ப வழி பிறக்குமோ?.இணையத்தில் ஒரு பெட்டிஷன் போட்டு , ஓட்டு வேட்டை ஆரம்பிக்கலாமா? ( தேசபக்தி மிக்கவர்கள் , கடமையாக எப்பொழுதோ ஹலோ சொன்னவர்களுக்கு கூட forward பண்ண ஆரம்பித்து விடுவார்கள்). அடுத்த பாரத் ரத்னா யாருக்கு கிடைக்கும் என்பது எனக்கு நல்லா தெரியுது.உங்களுக்கு?

Tuesday, June 29, 2004

மாட்டி ஸ்டெபனெக் ( MATTIE STEPANEK )

Muscular Dystrophy Association-ன் நல்லெண்ண தூதுவராக திகழ்ந்த, அற்புதமான கவிதைகள் எழுதிய 13 வயது மாட்டி ஸ்டெபனெக் ( MATTIE STEPANEK ) சென்ற வாரம் மரணமடைந்த செய்தி என்னை கலங்க வைத்ததுடன் , மனித வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை உணர்த்தியது.மனித சமுதாயத்தின் மூட நம்பிக்கையின் மீதான கோபத்தையும் எனக்கு இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

சிஎன்எனின் லேரி கிங் நிகழ்ச்சியில் பார்த்ததினால் எனக்கு MATTIE-யின் கதை தெரியும். பிறந்தவுடன் இறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உடல் நலக் குறைவுடன் பிறந்த இந்த குழந்தை , மரணத்தை எதிர்பார்த்தே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தது. 13 வயதிற்குள் எழுதிய கவிதைகளின் ஆழமும், வாழ்க்கையை எதிர் கொண்ட முறையும் உலகம் முழுவதும் பிரபல மடைய வைத்தன.Muscular Dystrophy பற்றி இணையத்தில் நான் படித்திருக்கிறேன்.

Muscular Dystrophy மற்றும் அது மாதிரியான தசைகளை பாதிக்கும் , நரம்பு மண்டலத்தை பாதிக்கும் குறைகள் பரம்பரையாக வரக் கூடியவை என்பதும் , ஆண் குழந்தைகளை அதிகம்
பாதிக்கும் என்பதும் , இவற்றை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை என்பதும் கொடுமையான விஷயங்கள். நம்ம ஊரில் ஊழ்வினை என்றும், செய்வினை என்றும் இத்தகைய
நோய்கள் கண்டு கொள்ளப் படுவதில்லை. stem cells research இது போன்ற நோயில் வாடும் எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும். ஆனால் , stem cell ஆராய்dசியின் சில வகைகள் தடை செய்யப் பட்டிருப்பதும் , மேற்கத்திய நாடுகளில் இதற்கு காணப்படும் எதிர்ப்பும் , மருத்துவ முன்னேற்றத்தை தாமதிக்க செய்கிறது. அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சி , மனித சமுதாயத்திற்கு எதிராக அமைந்து விடும் என்பது இவர்களின் மூட நம்பிக்கை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது.

மேலும் தகவலுக்கு http://www.mdausa.org/mattie/remember.cfm

Monday, June 28, 2004

களைப்பு

குறுக்கே போகும் பூனையையும்
காணவில்லை.

சகுனம் பார்த்து வழியனுப்பும் அம்மாவும்
வரவில்லை.

வேலை தேடி களைத்தது
நான் மட்டும் இல்லை...


கவிதை குறிப்பு : 21-30 வயதில் ctrl+c, ctrl+v வேலை பார்ப்பவர்களுக்கு இந்த களைப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Thursday, June 24, 2004

வட்டி

கூட்டலில் ஆரம்பித்து
பெருக்கலில் முடிந்து
மகிழ்ச்சியை கழித்து
கஷ்டத்தை வகுத்த
விசித்திர கணக்கு
கடனுக்கு கட்டிய
வட்டி

Monday, June 21, 2004

விண்கப்பல்ஒன்று

மைக்ரோசாப்ட் நிறுவனர் பால் அலெனின் பண உதவியுடன் செய்யப்பட்ட விண்கப்பல்ஒன்று (SpaceShipOne) வெற்றிகரமாக பறந்து சசாதனை புரிந்துள்ளது. 10 வருட கடின் உழைப்பு தந்த சாதனை இது.
3 நபர்களை பத்திரமாக பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் அனுப்பி உயிருடன் மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும் ( 2 வாரத்திற்குள் , அதே விண்கலத்தில் அந்த சாதனையை திரும்ப செய்ய வேண்டும்) விண்கலத்தை தாயரிக்கும் நிறுவனத்திற்கு

காத்திருக்கிறது 10 மில்லியன் பரிசுத் தொகை. இந்த முயற்சி அந்த பரிசுத் தொகையை குறி வைத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுப் போட்டி , ஆராய்ச்சிகளை ஊக்குவித்து, எல்லாருக்கும் வாண்சுற்றுலா கட்டுபிடியாகும்படி செய்வதே அதன் நோக்கம்.
2020 வருடத்தில் 100,000$க்கு டிக்கெட் கிடைக்கும் என்கிறார்கள். Priceline-ல் முயற்சி செய்தால் கொஞ்சம் cheap-பாக கிடைக்கலாம்.

நம்ம இதிகாசங்களில் வருகின்ற விமான வகைகளையும் , அஸ்திரங்களையும் (missile) பார்க்கும் போது ,எனக்கென்னவோ இந்தியாவில் அந்த காலத்திலேயே இத்தகைய சாதனையுல்லாம் செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று நம்புகிறேன்.கிடைத்தால் 10மில்லியன் நாமும் claim- பண்ணலாம்.
"உலகை முதலில் சுற்றி வந்தது யார் என்று அறிவியல் பரீட்சையில் கேட்டால் , ஏதாவது வாய்க்குள் நுளையாத பெயரை எழுதாமல் , முருகன் என்று எழுதுணும்டா " என்று எங்கள் தமிழாசிரியர் கம்பீரமாக முழங்குவார்.
அந்த காலத்திலேயே நாம எல்லாம் கண்டு பிடுச்சிட்டோம். எதையும் முறையாய் எழுதி வைக்காமல், மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் நம்ம சமுதாயத்தின் அரிய கண்டுபிடுப்புள் எல்லாம் அழிந்து விட்டது என்று வருத்தப்படுவார்.
"அர்த்தமில்லாமல் நாம செய்கிற பல விஷயங்களுக்கு ரொம்ம மெனக்கெட்டு அர்த்தம் கண்டிபிடித்து அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் மாதிரி , அறிவியல்பூர்வமான இந்திய வரலாறு என்று நீங்கள் யாரவது எழுதணும்டா" என்று வேண்டுவார்.
கம்பராமாயணத்தில் , இராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது, விமானம் ஓடிச்சென்று மேல் எழும்பியது என்று takeoff பற்றி விவரித்திருக்கிறார் என்று ஒருமுறை நண்பர் ஒருவர் கூட சொன்னார் .
அதை படிக்காமல், சென்ற நூற்றாண்டில் விமானம் கண்டு பிடிக்க முயற்சி செய்தவர்களெல்லாம் , மலையிலிருந்து குதித்து விமானத்தை பறக்க விட முயற்சித்தார்கள். பல முயற்திகளிக்கு பின் தான் runway/takeoff மகத்துவம் புரிந்தது அவர்களுக்கு என்று

சொன்னார். எனக்கு கம்பராமாயணம் படிக்கும் அளவுக்கு புலமையில்லாததால் அவர் சொன்னதை சரி பார்க்கவில்லை.ஆனால் அவர் சொன்ன விஷயம் என் பழைய நம்பிக்கையை வளர்த்தது. அந்த நம்பிக்கையில் நானும் , என்னை போல் நம்பும் நண்பர் ஒருவரும்

செய்த தேடலில் ( வேறெங்கே , இணையத்தில் தான் அந்த தேடல்) கிடைத்த தகவல்களை பின்னொரு நாளில் பதிகிறேன்.


இப்படி பழங்கதை பேசி , தொல்பொருள் ஆராய்ட்சி செய்து தான் இத்தகைய பரிசுகளை வாங்க எண்ண முடியும் என்ற காலமெல்லாம் கரையேறி , உலக அளவிலான போட்டிகளில் நம்மவர்கள் கலந்து கொள்வதை படிக்குக் காலம் விரைவில் வரும் ( வந்து விட்டது என்று சிலர் சொல்வது கேட்கிறது).

Friday, June 18, 2004

அசைவம் பாதி , சைவம் பாதி (?!!)

சில நாட்களுக்கு முன்பு ஒரு குழுமத்தில் ஒருவர்
mms://a805.v9135e.c9135.g.vm.akamaistream.net/7/805/9135/0009/peta.download.akamai.com/9135/skin-trade-ili_med.wmv என்ற link அனுப்பி , மிருகங்களை தின்பவர்கள் கொடியவர்கள் , நாகரீகமற்றவர்கள் என்ற சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார் .

"தாவரங்களுக்கும் உயிர் உண்டு , அதை கொல்வது மிருகங்களை கொல்வதை விட மிகப் பெரிய பாவம். விலங்குகளாவது சில சமயம் தப்பித்து சென்றுவிடும். பாவம் , இந்த தாவரங்கள். உங்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்க கூட முடியாது.
சைவமாக இருப்பது, உயிர்களின் மேலுள்ள் அன்பினால் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து.உங்களின் உணவு பழக்கம் வேறு, அசைவர்களின் உணவு பழக்கம் வேறு அவ்வளவு தான். ஒன்றை விட மற்றொன்று சிறந்தது அல்ல"
என்று காலங் காலமாய் சொல்லப் பட்டு வரும் மாற்றுக் கருத்தை அனுப்பினார் மற்றொருவர். அவ்வளவு தான், அதன்பின் வந்த நூற்றுக்கணக்கான ஆதரவு/எதிர்ப்பு மெயில்களை கொல்வது எனக்கு அன்றைய வேலையாகி விட்டது.

விவசாயம் செய்து சாப்பிட , 10000 ஆண்டுகளாகத் தான் மனிதர்களுக்கு தெரியும். அதற்கு முன் மாமிசம் தான். இடையில் வந்த இந்த விவசாயம் செய்து சாப்பிடுவதால் தான் இவ்வளவு உடல் நலக் குறைபுகளுக்கும் காரணம். நம் உடல் கூற்றிற்கு மாமிசம் தான் உகந்தது என்று முன்பு வேலை செய்த நிறுவனத்தின் அதிபர் சொன்னது ஞாபகம் வந்தது. அட்கின் டயட்-டும் இதை ஒத்து வருகிறது.

To become vegetarian is to step into the stream which leads to nirvana.
--Buddha

One is dearest to God who has no enemies among the living beings, who is nonviolent to all creatures.
--Bhagavad Gita

"Behind every beautiful fur, there is a story. It is a bloody, barbaric story. "
--Mary Tyler Moore

Animals are my friends-and I don't eat my friends.
--George Bernard

A human can be healthy without killing animals for food. Therefore if he eats meat he participates in taking animal life merely for the sake of his appetite.
--Leo Tolstoy

Nothing will benefit human health and increase chances for survival of life on Earth as much as the evolution to a vegetarian diet.
--Albert Einstein

என்று பெரிய மனிதர்களை சாட்சிக்கு இழுத்தார் ஒருவர். ஏனோ தெரியவில்லை , காந்தியை அவர் மறந்து விட்டார்.



How can you eat anything with eyes!
--Will Kellogg

என்ற வாசகத்தை படித்த போது, ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.சில வருடங்களுக்கு முன்பு , அலுவலகத்தில் புதிய (சைவ) நண்பரிடம் நான் சாப்பிட்ட ஊரும்,நடக்கும் , மிதக்கும் , நீந்தும்,பறக்கும் வகையறாக்களைப் பற்றி பீற்றிக் கொண்ட போது, என் அம்மா செய்யும் ஆட்டின் தலைக் கறியின் சுவையப் பற்றியும் சொன்னேன். தலையின் பல பாகங்களை பற்றி கேட்டு , இதைக் கூடவா சாப்பிடுவீர்கள் என்று வேதனை கலந்த ஆச்சரியத்துடன் கேட்டார். நான் எல்லாவற்றிற்கும் ஆமாம் போட , .அதைக் கேட்டு வாந்தி எடுக்காத குறையாம் ஓடிய அவர், தன் மனைவியிடமும் அதை சொல்லி வைத்திருக்கிறார். அதிலிருந்து , அவர்கள் இருவரும் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் , அசுரனைப் பார்பது போல்தான் பார்ப்பார்கள். (எனக்கே இதை எழுதும் போது/அவர்கள் நிலையில் இருந்து கற்பனை செய்து பார்க்கும் போது, சங்கடமாகத் தான் இருக்கிறது. ஆனால் உண்மையை எழுத வேண்டியிருப்பதால் , இதை எழுதுகிறேன்.)

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை , சைவமாக மாறி விடுவது என்று முடிவெடுத்து அதை என் அம்மாவிடம் சொன்னேன். மறு நாள் காலையில் , கடவுள் கனவில் வந்து , படையல் ( முன்னோர்களுக்கும் / தெய்வங்களுக்கும் அசைவ படையல் படைப்பது கிராமத்தில் எங்கள் குடும்ப வழக்கம்) சாமி பிரசாதம் , அதை சாப்பிட மாட்டேன் என்று சொல்லக் கூடாது என்று சொன்னதாகவும் , அதனால் அசைவம் சாப்பிட்டுத் தானாக வேண்டும் என்று சொன்னார்.தாய் சொல்லை தட்டாமல் ( அந்த ஒரு விஷயத்திலாவது) என் அசைவ துறவறத்தை அன்றே கை விட்டு விட்டேன்.அதன்பின் அசைவ பிரியனாகி விட்டேன்.நான் வருகிறேன் என்றால் , உறவினர் இல்லங்களில் சிறப்பு அசைவ விருந்து உறுதி.எந்த ஊருக்கு சென்றாலும், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் உணவகம் சென்று ஒரு வெட்டு வெட்டி விடுவேன்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் காந்தியின் சத்திய சோதனையை மீண்டும் ஓரு முறை படித்தேன். வாழ்க்கையில் அவர் எடுத்த பல்வேறு சோதனை முயற்சிகளை படித்த போது , மீண்டும் ஒரு உத்வேகம்/ஞானோதயம் வந்தது.
வாழ்க்கையில் பாதி நாட்கள் அசைவப் பிரியனாக இருந்தாகி விட்டது. மற்றொரு பாதியில் ( பாதி ,என்பது என் கணக்கின் படி. மேலே உள்ளவனின் கணக்கு என்னவோ?.) முழுச் சைவமானால் என்ன என்று?.
கடந்த 2 வருடமாக கஷ்டப் பட்டு , அசைவம் தவிர்த்து வருகிறேன்.அமெரிக்கா வந்து , சைவமானேன் என்றால் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். மருத்துவர் சொல்லியிருப்பார் அல்லது எடையை குறைக்கும் முயற்சி என்பது பலரின் எண்ணம்.

உயிர்களின் மீதான பாச அளவு கூடவோ , குறையவோ இல்லையென்றாலும் , Mcdonalds/KFC என்று திரிந்து வந்த நான் , இப்பொழுதெல்லாம் Pizza Hut நோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.இது போல போல இதுவரை கவனம் செலுத்தாத பல விஷயங்கள் இப்பொழுது கண்ணிற்கு தெரிய வருகிறது.

மகாத்மா கூட இன்று அகிம்சையாக தெரிவது , நாளை ஹிம்சையாக தெரியலாம் என்று சொன்னார் என்று ரஜினி (தலைவா !!!!) ராம்கியின் பதிவில் படித்தேன். அது தாவரங்களுக்கு பொருந்தும்.
பின்னாளில் தாவரக்களின் வாழ்க்கையைப் பற்றிய நம் அறிவு பெருகும் போது, அதை சாப்பிடுவது கூட தவறாகப் படலாம்.

குற்ற உணவிற்காக குறைக்கா விட்டாலும் , மாமிசமோ/காய்கறியோ சாப்பிடுவதை குறைத்தால் அனைவருக்கும் நன்று. "பேசினாலே காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் இறந்து விடும். அதற்காகத் தான் ஜெயின் மத குருக்கள் , வாயில் துணியை கட்டிக் கொள்கின்றார்கள் என்கிறார்கள்.எனவே பேச்சையும் குறையுங்கள்" என்று ஒரு குரல் கேட்கிறது.

எது சரி?. எது தவறு ?ஒன்னுமே புரியலே இந்த உலகத்திலே..
அதனால தான் அதில் பாதி , இதில் பாதி (!?!)

Tuesday, June 15, 2004

ஈர விறகு

நிழல் தரும்வரை
நீர் ஊற்றியவன்
நிலம் வீழ்ந்த பின்
நிறமாறியது ஏன்?

ஈரம் உள்ள நெஞ்சு
ஏன் பிடிப்பதில்லை
இந்த மனிதர்களுக்கு
நொந்து கொண்டது
வெயிலில் காய்ந்த
ஈர விறகு

Sunday, June 13, 2004

சுற்றும் உலகம் சுற்றட்டும்!

(தலை) உலகம் சுற்றுகிறது பதிவிற்கு ஈழநாதன் சரியான காரணத்தை சொல்லி விட்டார். நானும் கிட்டத்தட்ட அவர் சொன்ன பேருந்து உதாரணத்தை தான் சொன்னேன்.
http://www.aerospaceweb.org/question/dynamics/q0027.shtml இதை நன்றாக விவரிக்கிறது. நாம் எல்லாரும் , கணினியின் முன் நிலையாக உட்கார்ந்து இருந்தாலும்,
735mph வேகத்தில் (அண்டத்தை பொருத்தவரை) சுற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால் ஜாக்கிரதையாக தலைகவசம் (ஹெல்மெட்) அணிந்து கொண்டு கணினி முன் அமருங்கள்.


மிகவும் எளிதான கேள்வி போல் இருந்தாலும், சற்றே சிந்திக்க தோன்றும் கேள்வி. இது போல் நம்மை சுற்றி எத்தனையோ பதில்கள் இருந்தாலும், கேள்விகள் நமக்கு தெரிவதில்லை.
நண்பர் ஒருவர் வேடிக்கையாக சொன்னார் "நம்ம ஊரில் ஆப்பிள் மரம் இல்லாததால் தான் , நாம் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்கவில்லை என்று".

Thursday, June 10, 2004

வழி தேடி !

வழிப் போக்கன் நான்
செல்ல வழி தேடி திகைக்கிறேன்.

வழியெங்கும் வழிகாட்டிகள்
அவை காட்டும் வழிகள் பல

புதையல் தேடி புதைந்த வழி ஒன்று
உச்சி மலை ஏறி உருண்ட வழி ஒன்று
பரமபத ஏற்ற இறக்கம் பழகி தந்த வழி ஒன்று
போதிமரமென புளிய மரமடைந்த வழி ஒன்று
செக்குமாடாய் சுற்றி வந்த வழி ஒன்று


எந்த வழி சென்றாலும்
இறுதி ஒன்றுதான்...
இலக்கில்லாமல் நான்.


வந்த வழி எண்ணி
வைக்கிறேன் நானும் ஒரு வழி காட்டி

Tuesday, June 08, 2004

(தலை) உலகம் சுற்றுகிறது !

வேலைக்கு சேர்ந்த புதிது.சக ஊழியர் ஒரு நாள் திடீரென்று, உலகம் சுற்றுவது உண்மையா என்று கேட்டார்.எதற்காக அடி போட இந்த கேள்வியோ என்று நினைத்து அமைதியாய் இருந்தேன். ஒரு இடத்தில் இருந்து உயரே எம்பி குதித்தால் ஏன் அதே இடத்தில் விழுகிறோம் , கொஞ்சம் தள்ளி போய் தானே விழ வேண்டும் , உலகம் சுற்றுவது உண்மையா இருந்தால் என்றார்.இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல 20 மணி நேரம் ஆகிறது.ஆனால் பூமி 12 மணி நேரத்தில் அந்த தூரத்தை சுற்றி விடுகிறது. அதனால் , விமானத்தில் பறந்து செல்லாமல், பாராசூட்டில் சென்னைக்கு மேலே கொஞ்சம் உயரத்தில் மிதந்து கொண்டு இருந்தால் போதும், 12 மணி நேரத்தில் நியூயார்க் வந்து விடும்;கிழே இறங்கி விடலாம் என்று என் வாயை கிண்டினார். நான் உள்ளே ராஜேந்திரகுமார் கதையில் வருவது போல் "ஙே" என்று விழித்தாலும் , அரசு போல் "ஹி ஹி" என்று வழிந்து , ஒரு பதில் கேள்வி கேட்டு தப்பித்தேன்.அது என்ன என்பது பின்னொரு நாளில் வெள்ளித் திரையில் காண்க.....

Google-ல் போய் தேடாமல், பந்தை மேலே தூக்கி போடாமல், பதில் முன்பே தெரிந்தவர்கள் அடுத்த ஜென்மத்தில் பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள். (நன்றி பாரா)

Saturday, June 05, 2004

பாசம்

தெருவோர
பிச்சைக்கார தாத்தாவின்
இறுதி ஊர்வலம்

தாரை தப்பட்டையுடன்
அமர்களமாய்...

தெருவே ஆச்சரியத்தில்
அதுவரை பார்த்திராத
அவரின் மகனைக் கண்டு..

அந்த
தெருவோர வங்கி
மேலாளரை தவிர...

Thursday, June 03, 2004

விண் தூக்கி (Space Elevator)

என் தமிழாக்கம் தவறாக இருந்தால் ,மன்னித்து விடுங்கள்.

விண் தூக்கி , ஒரு நீண்ட நாள் விஞ்ஞான கனவாக இருந்தது.ஆர்தர் கிளார்க் 1970-ல் எழுதிய ஒரு நாவலில் இடம் பெற்றதில் இருந்து , பற்றிக் கொண்டது இந்த கனவு.ஆர்தர் கிளார்க் இன்று நடைமுறையில் இருக்கும் பல அறிவியல் அற்புதங்களை , தனது கதைகளில் முன்கூட்டியே சொல்லி வைத்த அதி அற்புத (விஞ்ஞான)கற்பனாவாதி.அதனால் தானோ என்னவோ அப்துல் கலாமும் , எல்லாரும் கனவு காணுங்கள் என்று சொல்கிறார். நான் ஆர்தர் கிளார்க் எழுதிய எதையும் படித்ததில்லை என்றாலும், என் இலங்கை நண்பர்கள் அவரைப் பற்றி எப்பொழுதும் பேசக் கேட்டிருக்கிறேன். கடந்த 30,40 வருடங்களாக இலங்கையில் அவர் வாழ்ந்து வருவதில் அவர்களுக்கு அப்படியொரு பெருமை.

இப்பொழுது கனிமத் துறை,கார்பன் நானோ டியூப் , லேஸர்,ரேடார்,ரோபோடிக் போன்ற துறைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் , விரைவில் விண் தூக்கியை நிஜமாக்கி விடும் என்று பல அறிஞர்களை நம்ப வைத்திள்ளது.அதனால் கற்பனை நிலையில் இருந்து , நடைமுறையில் செயல் படுத்த கூடியதாக இப்பொழுது இது கருதப்படுகிறது.

விண் தூக்கி என்பது , பூமியில் இருந்து கிட்டத்தட்ட 100,000 கி.மீ தூரம் ஆகாயத்தை நோக்கி (beyond geosynchornous orbit) செல்லக் கூடிய ஒரு இணைப்பு. ஆற்றின் இரு கரையை இணைக்கும் பாலம் போல , பூமியையும் , விண்வெளியையும் இது இணைக்கும்.இரும்பையும் விட வலுவான கார்பன் நானோ டியூப்பால் செய்யப்படும் ரிப்பன் போன்ற இந்த விண் தூக்கி.சியாட்டலில் உள்ள ஒரு நிறுவனம் இதற்கான ஆராய்ச்சிகள் இடம் பெற்று வருவதால் அடிக்கடி இதைப் பற்றி செய்திகள் உள்ளூர் பத்திரிக்கைகளில் வரும்.10 பில்லியன் செலவு ஆகும் என்கிறார்கள். இந்தியாவில் ஆறுகளை இணைப்பதற்குள் , இது நடைமுறையில் வந்து விடும் போல இருக்கிறது!!!.

இதன் மூலம் , மனிதர்கள், எரிபொருள்,தனிமங்கள்,சக்தி, வாயுப் பொருள்கள் என்று அனைத்தையும் கொண்டு செல்லலாம்.
தீப்பிழம்பை கக்கி கொண்டு , அசுர வேகத்தில் பறந்து செல்லும் ராக்கெட்டுகள் எல்லாம் பழங்கதையாகி விடும். மெதுவாக , "ஏலேலோ ஐலசா" பாடிக் கொண்டு , எல்லாரும் விண் வெளிக்கும் , அங்கிருந்து மற்ற கோளங்களுக்கும் சென்று வரலாம்.
பசிபிக்கில் இது அமையப்படலாம் என்று பட்சி சொல்கிறது.

இதன் மூன்றாவது ஆண்டு கருத்தரங்குக்கு இந்த மாதம் நடைபெற உள்ளது.(http://www.isr.us/SpaceElevatorConference/schedule.html)


Tuesday, June 01, 2004

அனுபவம் புதுமை

நீள்வாரயிறுதியில் ( வார்த்தை பிரயோகம் : நன்றி , மூக்கன்) வலைஞர்கள் பெரும்பாலும் எங்கேயாவது வெளியூர் சென்று வந்து , அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். நம் பங்கிற்கு அதை எழுதி தொல்லை கொடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் 2 விஷயங்கள் அதை புறந்தள்ளி விட்டன.

1. சியாட்டலில் நடை பெற்ற NorthWest Folk Life Festival-ல் 4 மணி நேரம் நடை பெற்ற இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு. பரதம் , குச்சிப்புடி நடனங்கள் இடம் பெற்றன.அரங்கு நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நடனம் முடிந்தவுடன் "standing ovation" கிடைத்தது.மேலை நாட்டவர் நம் காலாச்சாரங்களுக்கு நல்ல மதிப்பு கொடுக்கிறார்கள்.ஆனால் நாம் அவர்களிடம் கற்றுக் கொண்டதுn கலாச்சார சீர்கேட்டைத் தான்.

From the flyer

"Dance is a sacred art form that Indians have preserved for thousands of years, through various invasions and wars. In the process, they incorporated the rhythms of invading cultures. The classical dances combine fluid motion and lucid expression to become an art form that is pure poetry in motion. Folk dances, on the other hand, are spontaneous expression of emotion with natural rhythmic motions. Tribal and folk dances today provide the thread of continuity between the distant past and the present. They simultaneously reveal the most primitive and the most sophisticated expression of human experience and emotion. All folk dances represent the aspirations and beliefs of the people and are an expression of their life and aesthetic experience. Today's concert presents three classical dance forms--bharata natyam (originated in Tamil Nadu, presented
by Kala Ganesh, Dr. Joyce Paul and students of Srishti Academy), kuchipudi (originated in Andhra Pradesh, performed by Bhavana Vytla) and kathak (from North India, Leela Kathak Institute). Folk dances from various parts of India will show the color and rustic charm of rural India, and the IAWW youth program will present contemporary fashions with traditional costumes"

குச்சிப்புடி நடனம் ஆடியவர் ஒரு தாம்பாளத்தின் மீது நின்று ஆடி ஆச்சரியப்படுத்தினார்.

2."அரியர்ஸ் இல்லாதவன் அரை மனிதன்" என்று கல்லூரிகளில் உள்ள பழமொழி. அது போல "டிக்கெட் வாங்காதவன் அரை மனிதன்" என்று அமெரிக்காவில் சொல்லலாம். நான் ஏற்கனவே இரண்டு முறை டிக்கெட் வாங்கி சந்தேகத்திற்கு இடமில்லாமல் முழு மனிதனாகி இருந்தேன்.நிலத்தில் வாங்கியது பத்தாதென்று , சென்ற வாரயிருதியில் லேக் செலானில் ( சியாட்டலில் இருந்து 3 மணி நேர பயணம்) நீரிலும் speeding ticket எனக்கு. கரையோரத்தில் அலை எழும்படி ( 5 mph க்கு மேல்) speed boat-ல் செல்ல கூடாதாம். பின்னொரு boat-ல் "மாமா"க்கள் நீரில் விரட்டி வந்தது நல்ல அனுபவம். "களவும் கற்று மற" என்று மனதை தேற்றிக் கொண்டேன். Fine எதுவும் இல்லை என்பதும் ( ஒரு புத்தகம் கொடுத்து படிக்க சொன்னார்கள்) , insurance premium பாதிக்கப்படாது என்பதும் சந்தோஷ படக் கூடிய விஷயங்கள்.

Monday, May 31, 2004

பட்டாம் பூச்சி

கனவில் வந்த
பட்டாம் பூச்சி
கண்டதோர் கனவு !

கனவில் அது
மனிதானக
பட்டாம் பூச்சி
கனவு கானும் மனிதனாக !

நான்
மனிதனா?
பட்டாம் பூச்சியா?

எது கனவு?
எது நிஜம்?




கவிதைக் குறிப்பு
ஹாங்காங்கில் ஒரு உணவு விடுதியில் கேட்ட சீன க(வி)தையின்
தமிழாக்கம் இது.

Friday, May 28, 2004

நூலகம்

முதல் வகுப்பில் சேரும் முன்னரே மூன்று வருடங்கள் என் அக்காவுடன் (இந்திரா) பள்ளிக்கு சென்று பாடம் படித்த அனுபவத்தால் , எனக்கு 5 அல்லது 6 வது வயதிலேயே நன்றாக தமிழ் படிக்க வரும்.அப்பா அரசாங்க ஊழியர் என்பதால் கதைப் புத்தகங்கள் படிப்பது அவரின் ஊழியமாக இருந்தது.அவர் வாங்கி குவித்த வார,மாத இதழ்களை பார்த்து பத்திரிக்கை படிக்கும் பழக்கம் எனக்கு மிகச் சிறிய வயதிலேயே வந்து விட்டது.ஒரு நாள் இந்திராவின் தோழி ரேவதி என்னிடம் வந்து , பக்கத்து தெருவில் ஒரு இடம் இருப்பதாகவுப் , அங்கு கையெழுத்து மட்டும் போட்டால் போதும் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று சொன்னாள்.எதற்காக கையெழுத்து கேட்கிறார்கள் , ஒரு வேளை அதை வைத்து பின்னால் காசு கேட்பார்களோ என்று எனக்கு பயங்கர சந்தேகம். அதனால் உஷாராக வேறு ஒரு கற்பனை பெயரை அங்கே எழுதி விட்டு , வெற்றிகரமாக நூலகத்தின் உள்ளே சென்றேன்.

அங்கே இரண்டு அறைகள் இருக்கும். முதல் அறையில் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் இருக்கும். உள்ளே இருக்கும் அறையில் நாவல்கள் இருக்கும. அதன் முன்னே காவல் பூதமாக நூலக பொறுப்பாளர் அமர்ந்திருப்பார். முதல் நாளே நான் நேரடியாக நாவல் அறைக்கு செல்ல முயல, அவர் என் உயரத்தை பார்த்து என்னை உள்ளே செல்ல விட வில்லை. "உனக்கு அனா , ஆவன்னா தான் படிக்க தெரியும்,அதுக்குள்ள கதை புத்தகமா? போய் முன்னாடி இருக்கும் அம்புலி மாமாவில் கிழிக்காமல் படம் பார்" என்று விரட்டி விட்டார்.எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து , என் திறமையை அவருக்கு காட்ட , அம்புலி மாமாவை எடுத்து சத்தமாக படிக்க ஆரம்பித்தேன்.அவ்வளவு தான் , அடுத்த நிமிடம் நான் வெளியே...

பின்னொரு நாள் , அவர் சற்று அயர்ந்திருந்த சமயம் , உள்ளே ஓடிப்போய் , நான் முதலில் படிக்க ஆரம்பித்த புத்தகம் "விக்கிர மாதித்தன் கதை பாகம் 1". பின் பத்தாம் வகுப்பு வரை நூலகம் என் மற்றொரு வீடானது.

என் அப்பா எப்பொழுதும் ஒரு கதையின் முடிவை படித்து விட்டு தான் , பின் ஆரம்பத்திலிருந்து படிக்க ஆரம்பிப்பார். இந்த பழக்கம் எதனால் வந்திருக்கலாம் என்பது நூலகத்திற்கு செல்ல ஆரம்பித்த பின் தெரிய வந்தது. அங்கே உள்ள புத்தகங்களில் , பலவற்றில் முடிவு பக்கங்களை சில சஸ்பென்ஸ் பிரியர்கள் கிழித்து விடுவார்கள்.சிலர் அவர்களின் விமர்சனத்தை பதித்திருப்பார்கள்.சிலர் புத்தகத்தை "புறா" வாக பயன்படுத்த முயற்சித்திருப்பார்கள்.இது கொடுமை என்றால், பல வருடங்கள் சென்று , சென்னையில் அண்ணா சாலையில் உள்ள ORWO films-ல் வேலை பார்த்து வந்த என் சகோதரியை பார்க்க சென்ற போது , அருகில் உள்ள தேவநேய பாவணர் நூலகத்திற்கு சென்றேன்.அதை பலர் கட்டணம் இல்லாத ஓய்வறையாக பயன் படுத்து வதையும், பலர் அங்கு தூங்கி கொண்டிருப்பதையும் பார்த்து நொந்து போனேன்.

நூலகங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு அடிப்படை தேவை. வளரும் நாடாக இருந்தாலும் ,வறுமை கோட்டிற்கு கீழே இருந்தாலும் , ஊருக்கு ஒரு நூலகம் இருப்பது , இந்தியாவின் சிறப்பு.ஆயிரத்திற்கு குறைவாக உள்ள எங்கள் கிராமத்தில் கூட ஒரு சிறிய நூலகம் உள்ளது.பொது சொத்தை முறையாக,சரியாக பயன் படுத்த எல்லாரும் தெரிந்து கொண்டால் , இதை இன்னமும் சிறப்பாக பயன்படுத்தலாம். பின்னாளில் சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும் உள்ள அதி நவின நூலகங்களை பார்த்து ஏக்க பெரு மூச்சு விட்டது தனி கதை.

Thursday, May 27, 2004

கஞ்சனும் பட்டினத்தாரும்

நான் ஒரு கஞ்சன் என்பது என்னுடன் கல்லூரியில் படித்து , பின் பெங்களூரில் வேலை பார்க்கும்
போதும் , என்னுடன் ஒரு வருடம் தங்கியிருந்த என் நண்பன் செந்தில்குமாரின் திண்ணமான எண்ணம்.அப்பொழுதெல்லாம் , என்னைப் பார்த்து பின் வரும் பாடலை கூறி என்னை கிண்டல் செய்வான்.

"பாடுபட்டு தேடிப் பணத்தை புதைத்து வைத்த
கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்
கூடு விட்டு ஆவிதான் போயின பின்
யாருக்கால் உதவும் பாவிக்கால் இந்த பணம்"

இப்பொழுது உலகின் எந்த புறம் இருக்கிறான் என்பதே எனக்கு தெரியவில்லை. இது பட்டினத்தார் பாடல் என்று அவன் சொல்ல கேட்டிருக்கிறேன். இது நிஜமாகவே பட்டினத்தார் பாடல் தான இல்லை அவனது சொந்த சரக்கா அல்லது வேறு யாரேனும் எழுதியதா என்று தெரிந்து கொள்ள ஆசை. இதில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ளவும் ஆசை.

நான் தேடிய வரையில் http://www.infitt.org/pmadurai/mp083.html -யில் இது பற்றி குறிப்பிட படவில்லை. இது குறித்து தெரிந்தவர்கள் யாரேனும் இதை நிவர்த்தி செய்தால் நன்று.


Wednesday, May 26, 2004

இரட்டை கிளவி

அரை வேக்காடு
சத்தான உணவு
பத்தாத அறிவு


மதம்
கட்டுப்படுத்தும் வாழ்க்கை கோட்பாடு
கட்டுக்கடங்கா கோபத்தின் வெளிப்பாடு


கலை
அழகியல் துறை
அழிக்கும் முறை

Tuesday, May 25, 2004

காலணி

துணை பிரியாத
காவிய நாயகன்...
அயோத்தியை
அரசாண்ட மன்னன் !


கொடுத்து கொடுத்து
தேய்ந்த கரங்கள்...
ஆதரித்தவனுக்காக
உயிரையும் கொடுக்கும் கர்ணன் இவன்!

அரசியல் மேடைகளில்
ஆவலாய் பறக்கும்...
ஆலயத்தின் முன்னால்
ஒதுங்கிவிடும் பகுத்தறிவுவாதி!


கால நேரம் தெரியாமல்
காலை வாரும் அரசியல்வாதி...
விமான நிலையத்தில்
விசேஷமான் கவனிப்பு இவருக்கு!


கல்யாண வீட்டில்
கள்வனோடு ஓடிப்போகும்...
வண்ண மங்கையரின்
செல்ல ஆயுதம்...

Monday, May 24, 2004

சியாட்டலில் திரை திருவிழா

சியாட்டலில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எப்பொழுதாவது ஒரு முறை தமிழ் திரைப்படம் வரும்.அப்படியே வந்தாலும் கூட்டம் மிக குறைவாக தான் இருக்கும். இரண்டு , மூன்று வரிசை நிறைவதே கடினம் தான்.சியாட்டல் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்தால் மட்டும் கொஞ்சம் கூட்டம் கூடுதலாக வரும். ஆனால் இந்த மூன்று வாரங்களாக வார இறுதியில் தமிழ் திரைப்படம் திரையிடப் படுகிறது. கடந்த வாரம் "கில்லி".இந்த வாரம் "பேரழகன்". வரும் வாரம் "ஆயத எழுத்து". எனவே இது ஒரு "திரை திருவிழா" என் போன்றோருக்கு.

தமிழ் திரைப்படத்தை ஆதரிக்கும் கடையேழு வள்ளல்களில் நானும் ஒருவன்.கடைசியாக் என் மகளுடன் ஆசை ஆசையாய் "பாய்ஸ்" பார்த்து நெளிந்து நொந்து போயிருந்தேன். இருந்தாலும் , இந்த "திரை திருவிழா" மீண்டும் என்னை படம் பார்க்க தூண்டி விட்டது.

தமிழ் படம் திரையரங்கில் வந்து பார்க்க மாட்டேன் என்று சபதமெடுத்து ( என்ன மாதிரி வினோத சபதம். படம் "DVD"-ல் பார்க்கலாமாம், ஆனால் திரையரங்கில் பார்க்க மாட்டார்களாம்.)

ஒரு வருடமாக "லொல்லு" செய்து வந்த மனைவியை ஒரு வழியாக சமாதானம் செய்து , இரண்டு வயதான அருமை புதல்வன் என்ன பாடுபடுத்த போகிறானோ ( திரையரங்கிற்கு அவனின்
முதல் வருகை) என்ற கவலையுடன் ,முதல் வாரம் "கில்லி" சென்றோம். படம் அருமை. ( "A","B","C" எந்த சென்டருக்கு எடுக்க பட்ட படமானால் ரசிக்கும் தன்மை எனக்கு உண்டு).

என் பையனுக்கும் படம் பிடித்திருந்தது , படத்தின் வெற்றி. "அப்பா , கார் மூவி நல்லாக்கு" என்பது அவனின் மழலை கருத்து. இப்படித்தான் , என் மகள் இரண்டு வயதாயிருக்கும் போது ,

சிங்கப்பூரில் " ஜீன்ஸ்" பார்க்க கூட்டி சென்றிருந்தோம்.அவளும் அப்பொழுது பாடல்களை ரசித்து கண் சிமிட்டாமல் பார்த்தாள்.

முதல் அனுபவம் தந்த நம்பிக்கையில் , அடுத்த வாரம் "பேரழகன்" சென்றோம். என் மகன் கொஞ்சம் தொல்லை கொடுத்து விட்டான்."second half OK" என்பது என் 7 வயது மகளின் தோழியின் கருத்து."Ugly யாக இருந்தாலும் Goodd people அழகுதான்" இது என் மகள் கண்டு பிடித்த moral of the story.

வரும் வாரம் "ஆயத எழுத்து". செல்லலாமா , இல்லை "DVD அல்லது cassette"க்கு பொறுத்திருக்கலாம என்று யோசிக்க வைத்தது , இணையத்தில் சுழன்று வந்த விமர்ச்சனங்கள். ஆனால் அருணின் பதிவை பார்த்தபின் , திரையரங்கு சென்று பார்த்து விடுவது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.

இது மாதிரி குழப்பங்களை தவிர்க்க , எந்த விமர்ச்சனமும் வருவதற்குள் , முதல் நாள் , முதல் காட்சி பார்த்து விடுவது என் வழக்கம்.என்ன செய்வது , சியாட்டலில் எல்லா படமும் தாமதமாகத் தான் வருகிறது.

மானாமதுரையில் இருந்த வரை சுற்று வட்டாரத்தில் படம் ரிலீஸ் ஆகும் ஊருக்கு ( பரமக்குட்டி , இராமநாதபுரம் , மதுரை) நண்பர் பட்டாளங்களுடன் வேன் எடுத்துக் கொண்டோ அல்லது பேருந்திலோ சென்று விடுவது வழக்கம். காரைக்குடி வந்த பின் , பெரும்பாலும் படங்கள் அங்கேயே வெளியிடப் பட்டு விடுவதால் , முதல் நாள் ஆஜர் கொடுப்பதில் பிரச்சனை இருக்காது.
"தளபதி" மட்டும் அங்கு ரிலீஸ் ஆகவில்லை. அதனால் ராஜ்குமார் அண்ணன் மற்றும் அவரது நண்பர்களுடன் புதுக்கோட்டை சென்று பார்த்தேன். ( தேர்வு காலத்தில்).

எனது அக்காள் தலை தீபாவளிக்கு வீட்டிற்கு வந்திருக்க , அதி காலையில் கிளம்பி படம் பார்க்க சென்ற நான் , இரவு அனைவரும் தூங்கிய பின் தான் வந்து சேர்ந்தேன் என்றால் என் கலை பற்றை என்ன என்பது. என் பெற்றோரின் சகிப்பு தன்மையை என்ன என்று மெச்சுவது.

ஒரே நாளில் மூன்று படங்கள் , ஒரு வாரத்தில் ஏழு படங்கள் ,ஒரே படத்தை பதினாறு முறை பார்த்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. இதெல்லாம் கல்லூரி வரும் வரை தான்.
கல்லூரி வந்த பின் தான் தெரிந்தது , எனக்கு "அப்பன்கள்" நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று.

யார் இட்ட சாபம் !

அரை மணி நேர பயணத்திற்கு கூட
அமர்ந்து செல்ல
பேருந்தில் இடம் பிடிக்க
முண்டியடிக்கும் பொதுஜனம்!!


பெற்ற பிள்ளை
கசடற கற்க
கல்வி கூடத்தில் இடம் பிடிக்க
காத்து நிற்கும் பெற்றோர் கூட்டம்!!

கன்னியரின்
காதல் மனதில் இடம் பிடிக்க
கடுந்தவம் செய்யும் காளையர் கூட்டம்!!

தலைவர் படத்தை
முதல் நாள் பார்க்க
திரையரங்கில் இடம் பிடிக்க
மோதிக் கொள்ளும் ரசிகர் கூட்டம்!!


எந்த அரசு வந்தாலும்
அமைச்சரவையில் இடம் பிடிக்க
எதையும் செய்யும் அரசியல் கூட்டம்!!


யார் இட்ட சாபம்
இந்த "இடம் பிடிக்கும்" தண்டனை
மானுட சமுதாயமே அல்லல்படுகிறதே!

Saturday, May 22, 2004

நான் கேட்ட முதல் ஹைகு

மேல் நிலை கல்வி பயிலும் போது வானொலியில் முதல் முதலலாக ஹைகு பற்றி விவரித்து விட்டு கவிஞர் மீரா என்று நினைக்கிறேன், அவர் சொன்ன ஹைகு இன்னமும் என் நினைவில் நிற்கிறது.


அழுக்கை தின்னும்
மீனை தின்னும்
கொக்கை தின்னும்
மனிதனை தின்னும்
பசி!

Friday, May 21, 2004

என்று தணியும் இந்த பதவி மோகம்

From WebUlagam http://www.webulagam.com/news/regional/0405/21/1040521004_1.htm

தமிழக காங்கிரசில் எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருமே அமைச்சர் பதவி பெற விரும்புவதாகவுப் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்று மாறும் இந்த கல்வி முறை

இந்திய கல்வி முறை அடிப்படையில் மாற்றப் பட வேண்டும் என்பது என் கருத்து.
அறிவொளி இயக்கத்தில் பயில்வோர் மாதிரி , பரீட்சைக்கு முதல் நாள் ஹாஸ்டலில் அடுத்தவன் படித்ததை முதல் நாள் கதை மாதிரி சொல்லக் கேட்டு அடுத்த நாள் அதை எழுதி, அவனை விட மதிப்பெண் அதிகம் வாங்கும் சாமர்த்தியசாலிகள் உண்டு.வருடம் முழுவதும் ENJOY செய்து விட்டு , study leave-இல் மாங்கு மாங்கு என்று படித்து நல்ல மதிப்பெண் வாங்குவோரும் உண்டு. உணவு,உறக்கம் தவிர்த்து படிப்பே வாழ்க்கை என்று முதல் தரம் எடுக்க கடும் தவம் செய்பவரும் உண்டு.என்னதான் படித்தாலும் ,எவ்வளவோ புத்திசாலித்தனமாக பாடத்தை புரிந்து கொண்டாலும் , just pass செய்பவரும் உண்டு.

"புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" என்பது நம் கல்வி முறைக்கு மிகப் பொருந்தும். வருடம் (வாழ்க்கை) முழுவதும் கணிதத்தில் 100க்கு 100 எடுத்து விட்டு, +2-வில் ஒரு கணக்கு தவறாக் போட்டு விட்டு , நல்ல பொறியியல் கல்லூரி செல்ல முடியாமல் தவித்த நண்பர் எனக்கு உண்டு.பரிட்சை நேரத்தில் உடல் நிலை சரியில்லாமல் வருடங்களை தொலைத்தவர்களும் உண்டு.ஒரு நாள் திருவிழாவாக இந்த கல்வி முறை உள்ளது.

கல்வி எனக்கு கற்று கொடுத்தது கடின உழைப்பை மட்டும் தான். சிந்திக்கும் திறனை வளர்த்ததா என்றால் சந்தேகம் தான். தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் அது வளர்க்கவில்லை.கல்லூரி வரை எனக்கு கல்வி ஒரு பெருஞ்சுமையாகத் தான் இருந்தது.எனக்கு தெரிந்த பலருக்கும் அப்படித்தான்.கற்பது ஒரு சந்தோசமான விஷயமாக எல்லாருக்கும் இருக்க , இந்திய கல்வி முறை அடிப்படையில் மாற வேண்டும்.

Wednesday, May 19, 2004

வைகை

மானாமதுரை - வானரவீரமாமதுரை என்பது மருவி மானாமதுரையானதாக கூற கேட்டதுண்டு.சீதையை மீட்க சென்ற ஆஞ்சிநேயர் , தன் வானர படைகளுடன் தங்கியிருந்ததால் வந்த காரண பெயர் இது என்பர். பாரதிராஜா படத்தில் வருபது போன்ற அழகிய சிறு நகரம். ( பெரும் கிராமம் என்றும் சொல்லலாம்.)

மட்பானைக்கும், மணக்கும் மல்லிக்கும் பெயர் பெற்ற ஊர் மானாமதுரை. ஆங்கிலேயர் காலத்து இரயில்வே ஜங்சனும், ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் கட்டிய கல்வி கூடங்களும் ( ஒக்கூரில் வேறு ஒருவர் முன்பே கல்வி கூடங்கள் கட்டி விட்டதால் மானாமதுரைக்கு கிடைத்தது இந்த பாக்கியம்) சுற்று வட்டார கிராமங்களில் மானாமதுரையை பெரிய ஊர் ஆக்கியது.

ஊரின் உயிர் நாடி , அதன் நடுவில் செல்லும் வைகை நதி. சிறு வயதில் உங்கள் ஊரில் ஆறு இருக்கிறதா என்று வேறு ஊரில் வசிக்கும் மற்ற உறவின சிறுவர்களை பெருமையுடன் கேலி செய்ய உதவிய நதி. நதியும் நதி சார்ந்த நாகரீகமாக எங்கள் அனைவரின் வாழ்கையிலும் கலந்து விட்ட நதி.

மேல் கரையில் ஆனந்தவள்ளி சோமநாதர் கோவில். கீழ் கரையில் பெருமாள் கோவில். இந்த புறம் மாதா கோவில் , அந்த புறம் மசூதி. ஆற்றின் நடுவே 100 வயதான பாலம். ( இப்பொழுது புது பாலம் கட்டப்பட்டுள்ளது). கலைஞர் முதல் முறை முதல்வராய் வருகை தந்த போது , துரிதமாய் மேடைக்கு செல்ல அமைக்கப் பட்ட பாதி அரித்து , கரைந்து போன கட்டை மண் பாலம் ஒன்று.

நதி என்றவுடன் வற்றாத நதி என்று நினைத்து விட வேண்டாம். எப்பொழுதுமே வற்றிய நதி தான் எங்கள் வைகை.வருடத்திற்கு 10- 15 நாட்கள் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற நாட்களில் எங்களுக்கு அது மிகப் பெரிய விளையாட்டு மைதானம்.கபடி,கிளித்தட்டு,எறி பந்து என்று குழு விளையாட்டு ஆனாலும் சரி , பட்டம் விடுதல் , புதிர் விளையாட்டு போன்ற மென்மையான விளையாட்டு ஆனாலும் சரி , கிரிக்கெட், வாலிபால் போன்ற நவீன விளையாட்டு ஆனாலும் சரி , சிறுவர்கள் எங்களுக்கு ஆறுதான் மைதானம். பெருசுகளுக்கு அதுவே விவாத மேடை ஆகி விடும் . அவர்கள் பேசும் அரசியலும், அக்கம்பக்கத்து கதைகளும், விளையாடி களைத்து ஓய்வெடுக்கும் போது காதில் விழும்.அப்படி கற்றுக் கொண்டது தான் பல விஷயங்கள்.

கோபம் வந்து விட்டால் ,"சாயங்காலம் ஆற்றுக்கு வாடா , ஒரு கை பார்த்துக்கலாம்" என்று எதிரிகளிடம் சவால் விட்டு மோதும் குஸ்திகளமாகவும் இருக்கும்.சமயத்தில் ஊரும் ஊரும் மோதிக் கொள்ளும் குருசேஷ்திர போர்க்களமாகவும் அமையும்.

ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால், அதுவே நீச்சள் குளமாகி விடும். மீன் பிடிக்க பெரிய படையே கிளம்பி விடும். தண்ணீர் வற்றும் போது , வெறும் கையிலேயே மீன் பிடித்ததுண்டு.தண்ணீர் வந்தால் பலி வாங்காமல் வற்றாது என்று பெரியவர்கள் அபிப்ராயம். ( அது பெரும்பாலும் உண்மை). அதனால் வீட்டிற்கு தெரியாமல் "டிமிக்கி" கொடித்து விட்டு தான் செல்ல வேண்டும்.

சித்திரா பௌர்ணமிக்கு நிலாச்சோறு சாப்பிட இரவில் ஊரே கூடும் சாப்பாட்டு கூடமாகி விடும்.சித்திரை திருவிழா நேரங்களில், நாடக மேடை ஆகி விடும்.இலவச சினிமா திரையரங்காகவும் இருக்கும்.

அழகர் ஆற்றில் இறங்கும் நாள் , எல்லாவற்றிற்கும் உச்சகட்டம்.தங்கை மீனாட்சியின் திருமணம் காண அந்த கரையில் இருந்து அழகர் குதிரை வாகனத்தில் வருவார். அவர் வரும் முன்பே திருமணம் நடந்து விட , கோபித்து கொண்டு வேக வேகமாக திரும்பி ஓடி விடுவார். அழகர் வரும் போது, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வைபவம் உண்டு. அது எல்லார்க்கும் மிகவும் பிடிக்கும்.

சக்தி விகடனில் மதுரை அழகர் ஆற்றில் கதை சில நாட்களுக்கு முன்பு வந்தது.அதில் சொல்லப்பட்டிருக்கும் காரணம், மேலே சொன்ன ( எங்களுக்கு காலம் காலமாய் சொல்லப்பட்ட) கதையில் இருந்து முற்றிலும் மாறு பட்டிறுந்தது.

வைணவமும் , கைலாயமும் ( சைவமும்) அழகர் ஆற்றில் இறங்கும் போது கலப்பதால் , வைகை என்று அழைக்கப் படுவதாக சுகி சிவம் சொல்வது சாலப் பொருத்தம்.

Tuesday, May 18, 2004

பாரதியும் நானும்...

மூன்று அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிறுந்த போது என்று நினைக்கிறேன்.
மழைக்காக பள்ளியில் ( ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் ஆரம்ப பாட சாலை , மானாமதுரை) ஒதுங்கிய மாலை வேளை!
நான் முதலாம் வகுப்பு படித்த அறையில் ஒரு இளம் பேச்சாளார் மிக ஆவேசமாக , அற்புதமாக பேசிக் கொண்டிறுந்தார்.
பால்ய விதவைகளின் அவலங்களை கண்ட பாரதியின் கோபத்தை , அதை பிரதிபலித்த கதை , கவிதைகளை பற்றி விவரித்தார்.இந்த மாதிரி கொடுமை செய்பவர் இருக்கும் இடத்தில் நில நடுக்கம் வந்து அந்த பச்சிளம் பாலகிகளை தவிர மற்ற அனைவரும் மடிய வேண்டும் என்று சொல்லியதாக ஞாபகம்.என் மூத்த அண்ணன் மறைந்து , அண்ணி விதவையாக அப்பொழுது இருந்ததாலோ என்னமோ தெரியவில்லை, அந்த பேச்சில் மிகவும் கவர்ந்து போனேன்.அன்று பிடிக்க ஆரம்பித்தது பாரதியை...
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடத்தில் படித்த போது, என் நெஞ்சில் நீக்க மற நிறைந்தார்.
பின் பாரதியின் பாடல்களை தேடிப் படித்தேன். பெரும்பாலும் எனக்கு பிடித்தவை அவரின் மிகப் பிரபலமான பாடல்களே.. அதனால் அவற்றை இங்கே வரிசை படுத்த வில்லை.

விடலை பருவத்தில் "பாரதி" என்று பெயர் கொண்ட பெண்களின் பின்னால் மையல் கொண்டு அலைந்ததற்கும் , இதற்கும் அறிவுப்பூர்வமாக எந்த சம்பந்தமும் இல்லை.

Monday, May 17, 2004

கலைந்தது கனவு!

முன் குறிப்பு : - கல்லூரி காலத்தில் கிறுக்கியது.

அன்பே!
உன்
விழியோரங்களில்
நான்
கண்ட
ஓரங்க நாடகம்...
என்
கனவில்
நினைவுத் திரை விலக...

நாயகன்
அரூபமாய்..
நாயகி
உன் சொரூபமாய்...

அன்பு
நட்டுவாங்கம் செய்ய
ஆனந்த தாண்டவம்...

கனவு பாசறையில்
அறிவு
துருப்பிடிக்க...
நிஜம்
நிதர்ட்சனமாய் சுட்டது...

நாயகனாக
துடிக்கும்
ரசிகனாய் நான்...

தூக்கத்தை தொலைத்து விட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன்
கனவை!

திருமதி.சோனியா காந்தி !!!

எங்கு பார்த்தாலும் ஒரே விவாதம்!!!
இன்று அலுவலகத்தில் கிட்டத்தட்ட 50 emails. பெரும்பாலும் சோனியாவை எதிர்த்து!!!
அந்நிய மண்ணில் விசுவாசமாய் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து இந்த கருத்து!.

என் சொந்த கருத்து சோனியாவுக்கு ஜே!!!.
காரணம்
1)யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!
2)கணவன் இறந்த பின் உடனே அரசியலுக்கு வரவில்லை. நீண்ட நாட்களுக்கு பின்
கட்சியை ( கணவன் பெயரை?) காப்பாற்ற வந்தார்.
3)இந்திய அரசியலில் இதுவரை ஈடுபட்ட பெண் அரசியல்வாதிகள் ( இந்திரா காந்தி , ஜெயலலிதா , மாயாவதி, மம்தா பானர்ஜி ) ஒப்பிடுகையில் சோனியா எவ்வளவோ மேல்!

Wednesday, May 12, 2004

Thank You Mr. ChandraBabu Naidu

He is a seasoned politician every inch but he delivered what most others never even thought for a moment.
He changed the dynamics of politics and acted more like a CEO.
I am not going to argue whether or not he is corruption free or he reached out to the poor or he hyped his image etc.
Every politician does that. But none before changed the image of govt. India like the way Mr. Naidu did. For that I bow my head.
Well done indeed and a what a good show!!!.
Now every CM wants to be proactive like him and that indeed speaks his achievement. It’s a life time achievement and in Indian political history Mr.Naidu has a permanent place.

Tuesday, May 11, 2004

The places I have worked...

WS Industries (Dec-1992 to Apr-1995 ):
======================================
My first job. I was very fortunate to get this job within very few interviews. That means a lot to a fresher before the IT boom in India.
Very bad experience except for some very good friendships. Managers over there were horrible. I quit the company at the right time thanks to the course done at “Brilliant” Software Training Institute.


Accord (May-1995 to Apr-1995) : http://www.accord-soft.com
===================================================================
Wonderful people. The company was run like a family business by a close gang of 6 people.

I got salary hike every month. (yes. every month). My life has changed for ever.Dedicated staffs were working on ambitious GPS project.

I should some day start a company like these people.

Deutsche Software ( May-1996 to Oct-1996 ): http://www.db.com
===============================================================

What a life!!! Traveling in business class. Nice Food and beverages served at the table. Games and riddles to play with. Talented people around and very little work ( at the beginning). My software career flourished here. I was very creative and eager to learn and people loved me. I was doing primarily Oracle Reports and then on to PL/SQL. My first overseas trip to Singapore.

Eutech ( Dec-1996 to May-2000 ): http://www.ecyber.com
=======================================================
I learnt a lot. Interesting mgmt team with ambitious goals and lots of good friends. Some people liked me a lot and some of them hated me a lot . My leadership skills and analytical skills grew a lot.
I had the life time opportunity to travel lots of places and meet with lots of interesting people and implement lots of different projects. You can see how many times I used “lots of” in the previous sentence and see how excited I am.
I really enjoyed a lot. I declined an offer from a Big Multi National for this sake.

iOrmyx ( June-2000 to OCT-2000 ) : http://www.iormyx.com
=========================================================
very short span. Difficult time in moving from Singapore to USA and iORMYX made it worse for me. With determination I put everyting behind and bought a ticket to USA and landed here. It was a nightmare. But quickly I got into a project and some good people around to support ( transportation, advise, accommodation).Quickly become the tech. leader in the project at onecore Got offers from OneCore , Cap Gemini and Microsoft and joined Microsoft.

Microsoft ( Oct-2000 to Till Date ) : http://www.microsoft.com
==============================================================
Challenging and rewarding environment. So far so good.My projects have been so far well recognized and widely popular internally. But still I feel I have achieved very little at Microsoft and trying to recharge my batteries to propel higher. Always looking for the right opportunity to realize my FULL potential.

Monday, May 10, 2004

Indian Elections

Biggest democracy goes into poll today and the results will start coming out from tomorrow and Pranoy Roys and others will be doing all sorts of analysis in the media in this week and it will be lot of fun !!!.

Some of the questions that is lingering on my mind are
1. Will it be a hung parliament and will there be a coalition govt or a single part govt?
2. What will happen to IT ( Chandra) Babu?
3. What effect Rajni Fan’s will have on this election in TN?
4. How will Amma’s stubbornness will be meted out by the people in TN?
5. What will be the post election alliance ?

Saturday, May 08, 2004

My First Drink !!!

I could really remember very clearly when I had my first drink . it’s because it was done on an very important day in Indian Histroy. Guess What?.


We were on our first ever Educational(??!!) tour on our third semester EEE in ACCET in 1989.
I was one of the very few day scholars at the college and we were treated like a different kind of animals or to put it in other words , we were always treated like “FRUITS”.
May be because everyone else is enjoying their freedom at hostel , we were still struggling to breathe freedom outside our home to do “SUCH” things that any other adult would love to do at this age.

Our first destination was the famous “OOTY” the “Queen of Hills” and the first thing any one would think to do at OOTI is to have a “DRINK”.
So we pledged to have a beer as soon as we land in OOTY , since this would the first opportunity for us to stay away from out homes.

We landed in OOTY and checked in to the Hotel (YMCA) and were waiting eagerly for the night to come.
We very carefully avoided many folks , simple because they may notice that and make fun of this spreading this news.
Myself , Suresh Kumar , Raj kumar and Ravi shankar VB went to the nearest BAR and to our surprise the BAR WAS CLOSED. We thought may be the Shop was on holiday and went out looking for another BAR.
And to the surprise again , the next BAR was also Closed.
We were bewildered but never decided to give up , Remembering that this was our first stay outside home and we should make use of it fully.
We walked a mile away from this place to venture into a new area and to our sadness again the BAR’s in that region were also closed.
You could imagine our state of mind that time. We thought may be GOD was not willing to let us spoil (?) and be remained as “FRUITS” for ever.
Then I pulled up my courage and enquired a “kudi mahan” near the bar about what was the reason for the closure all the Bars.
He stared at all of us and laughed and then came the reply “Today is Gandhi Jayanthi”.
Oh! God. We ,Indians, totally forgot that “Gandhi Jayanthi” is the only day when all the Bars in India would be closed marking the respect for the Great Saint for his fight against “Liquor”.

So what next?.
Give up or ….

We , all four ,looked at each other and were for a moment speechless.
Then some one asked “Is there any other way to get a bottle of Beer?” and that “kudi mahan” answered thet we could go to the back door of the BAR and they might sell it there.,“Thanks to the Indian System” and sure we did it.
Finally we bought a bottle of beer and four of us shared it and of course got some kick out it.

Now you know well , How easy for me to remember the day when I took my first drink. It’s Gandhi Jeyanthi day. October 02nd 1989

Friday, May 07, 2004

Happy, Not Paranoid

Some snipperts from Silicon India
...
...

Craig Barret once remarked that “only the paranoid survive.” Jothilingam, however, takes it a step further and believes that it is the ones who are, in his words, “happy,” who thrive. He should know, for he is a person who has experience where it counts.


Life is Fun
“If you look at business or life,” expands Jothilingam, “you find three elements—people, processes, profits. If you manage yourself (in your life) and people (in your business), and are clear about the processes you adopt, profits will follow.” The bottomline is that it is not as much as getting to Point B from Point A, as much as the process of getting from Point A to Point B. “Think of anything you have done in life,” he says, his voice pitching higher to match the enthusiasm with which he is trying to get the point across. “It’s getting there that’s the fun. Say you want to make a million dollars, and someone hands it to you on a platter, you will not enjoy it. On the other hand, if you worked smartly at it, put the right things together, then you will. More than the guy next door who made a hundred million dollars.”

...
...

“Business is about people.” To have a successful business, one has to manage people well—build strong relationships. And, even more profoundly, that “the No. 1 relationship which a person has is with himself”. Then come family and friends, employees, vendors and customers. For all these relationships, there is one, and only one, guiding philosophy. That is to “treat people as you would expect them to treat you”.
...
...

-----------------------------------------------------------------------

For most part of my life I am in the "paranoid" category.
Treating people , I follow the same principle except when I am angry :)


முதல் கவிதை

நான் பெரிய கவிஞனில்லை. தொடர்ந்து எழுதுபவனும் இல்லை.
ஆனால் தமிழை நேசிப்பவன்.
1988-89 ல் எழுதிய முதல் கவிதை.
-----------------------------------------------------

அன்பே !

நீ கண்ணகியாக இருக்கலாம்
ஆனால் நான் மதுரையல்ல எரிந்து போக

நீ சீதையாக இருக்கலாம்
ஆனால் நான் நெருப்பல்ல உன்னை அணைக்க அஞ்சுவதற்கு

ஆனால் நான் தமிழன்
வெற்றியடையும் வரை விடா முயற்சிக்க...

Thursday, May 06, 2004

Anamikaa ( அனாமிகா )

எப்பொழுதோ லக்ஷ்மியின் கதையில் படித்த ஞாபகம்.
கல்லூரயில் கவிதை எழுத எண்ணம் வந்த பொழுது ஒளிந்து கொள்ள உதவியது.
அரூபமாய்...
பெயரில்லாதவன்...
எனக்கு மிகவும் பொருத்தமாய்...
எத்தனையோ பேருக்கு புனை பெயராய் இருந்த பெயர்...
எனக்கும் உதவிற்று...

முதல் கவிதை "சங்கமத்தில்" வெளி வந்த போது
சுற்றுலாவில் எல்லோறும் நண்பண் ராஜ்குமார் தான் இதை எழுதியதாய் நினைத்திருந்த பொழுது ,
அவன் தான் இல்லை என்று மறுத்ததை தூரத்தில் இருந்து ரசிக்க உதவிய பெயர்...

Professor T.R.T அதிசயமாய் வகுப்பறையில் வினவிய பெயர்...

என் புனை பெயர்...

என் முதல் தமிழ் BLOG

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
Read about Picasso Painting setting record for auction sale with 100+ millions and wondering how it might be connected to my recent interest to write Kavithai ( Poem) about "Thoorighai ( Paint brush)" :)

Frustrating day at work. I generally take others feedback well in the right sense ( Even if they don't mean it in that way) but today it was totally different. I was furious and fuming all day. Such incidents and remarks should propel me higher and higher.

Discussed with Ram how frustrating it is even to debug one simple code ( protocol handler...).
Technology has still lot to improve and we are in stone age still in IT. It's too soon to call "IT doesn't matter". I really feel that it is just the beginning of the beginning.


I often see some famous quotes as the foot note in some emails that are thought provoking.

Thinking about some of the qutoes I love

"Quality is never an accident. It is always the result of high intention , sincere effort ,intelligent direction and skillful execution. It represents the wise choice of many alternatives"

"We must be the change we wish to see"

"No person can be a great leader unless he takes genuine joy in the successes of those under him"

"My opinions may have changed, but not the fact that I'm right"

I will add more to this collection in later blogs.

Wednesday, May 05, 2004

Interesting day with lots of learnings.
Went for a walk with Shammu and it was very refreshing. Watched some of the old moives Anandh suggested in the library and the kids enjoyed the most.
Read about "Kallalagar" in SakthiVikatan and rememberd the childhood days in Manamadurai.
Thinking about writing a kavithai about "Thoorighai" after a loooooooooooooooong time ( a decade!!!).
I always select the "title" first and then think about what to write. That's me :)

Tuesday, May 04, 2004

It's wonderful to see Sundar Rajan and now Rajkumar started blogging regularly and share their poems , thoughts and their experiences in free flow and I am stunned to see how the IT and the web is morphing and evolving when everyone thinks this is the end. I have curtailed my sporadic intentions many times before to start blogging just to make sure that it's not temporary and I should not start just to join the bandwagon but I can commit it to it long and now I finally decided it's time to start.

Sunday, May 02, 2004

Hello World!!!
Just getting started ...