இந்திய கல்வி முறை அடிப்படையில் மாற்றப் பட வேண்டும் என்பது என் கருத்து.
அறிவொளி இயக்கத்தில் பயில்வோர் மாதிரி , பரீட்சைக்கு முதல் நாள் ஹாஸ்டலில் அடுத்தவன் படித்ததை முதல் நாள் கதை மாதிரி சொல்லக் கேட்டு அடுத்த நாள் அதை எழுதி, அவனை விட மதிப்பெண் அதிகம் வாங்கும் சாமர்த்தியசாலிகள் உண்டு.வருடம் முழுவதும் ENJOY செய்து விட்டு , study leave-இல் மாங்கு மாங்கு என்று படித்து நல்ல மதிப்பெண் வாங்குவோரும் உண்டு. உணவு,உறக்கம் தவிர்த்து படிப்பே வாழ்க்கை என்று முதல் தரம் எடுக்க கடும் தவம் செய்பவரும் உண்டு.என்னதான் படித்தாலும் ,எவ்வளவோ புத்திசாலித்தனமாக பாடத்தை புரிந்து கொண்டாலும் , just pass செய்பவரும் உண்டு.
"புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" என்பது நம் கல்வி முறைக்கு மிகப் பொருந்தும். வருடம் (வாழ்க்கை) முழுவதும் கணிதத்தில் 100க்கு 100 எடுத்து விட்டு, +2-வில் ஒரு கணக்கு தவறாக் போட்டு விட்டு , நல்ல பொறியியல் கல்லூரி செல்ல முடியாமல் தவித்த நண்பர் எனக்கு உண்டு.பரிட்சை நேரத்தில் உடல் நிலை சரியில்லாமல் வருடங்களை தொலைத்தவர்களும் உண்டு.ஒரு நாள் திருவிழாவாக இந்த கல்வி முறை உள்ளது.
கல்வி எனக்கு கற்று கொடுத்தது கடின உழைப்பை மட்டும் தான். சிந்திக்கும் திறனை வளர்த்ததா என்றால் சந்தேகம் தான். தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் அது வளர்க்கவில்லை.கல்லூரி வரை எனக்கு கல்வி ஒரு பெருஞ்சுமையாகத் தான் இருந்தது.எனக்கு தெரிந்த பலருக்கும் அப்படித்தான்.கற்பது ஒரு சந்தோசமான விஷயமாக எல்லாருக்கும் இருக்க , இந்திய கல்வி முறை அடிப்படையில் மாற வேண்டும்.
Friday, May 21, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மெய்யப்பன், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெக்காலே பிரபு தந்த கல்வி திட்டத்தின் நன்மை / தீமை குறித்து பல ஆராய்ச்சி நடந்துள்ளது. முக்கிய தீமை : நீங்கள் சொன்னது போல், கல்வி ஒரு பெருஞ்சுமை ஆனது தான். ஏனெனில், இந்திய கல்வி முறை இன்னும் குமாஸ்தாக்களை உருவாகும் வகையிலே அமைந்துள்ளது. தனியொரு மாணவனின் கடின உழைப்போ, தனியொரு ஆசிரியரின் பெருமுயற்சியோ தான் நம்மில் சிலர் பிழைத்துக்கொள்ள உதவுகிறது.
நமது பழைய குருகுல முறையில் 'உரையாடல்' 'கேள்வி பதில்' பாணியில் கல்வி புகட்டப் பட்டது. அதுபோல் பாடம் நடத்தும் முறை மாறினாலே நம்முடைய சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.
Post a Comment