Tuesday, June 08, 2004

(தலை) உலகம் சுற்றுகிறது !

வேலைக்கு சேர்ந்த புதிது.சக ஊழியர் ஒரு நாள் திடீரென்று, உலகம் சுற்றுவது உண்மையா என்று கேட்டார்.எதற்காக அடி போட இந்த கேள்வியோ என்று நினைத்து அமைதியாய் இருந்தேன். ஒரு இடத்தில் இருந்து உயரே எம்பி குதித்தால் ஏன் அதே இடத்தில் விழுகிறோம் , கொஞ்சம் தள்ளி போய் தானே விழ வேண்டும் , உலகம் சுற்றுவது உண்மையா இருந்தால் என்றார்.இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல 20 மணி நேரம் ஆகிறது.ஆனால் பூமி 12 மணி நேரத்தில் அந்த தூரத்தை சுற்றி விடுகிறது. அதனால் , விமானத்தில் பறந்து செல்லாமல், பாராசூட்டில் சென்னைக்கு மேலே கொஞ்சம் உயரத்தில் மிதந்து கொண்டு இருந்தால் போதும், 12 மணி நேரத்தில் நியூயார்க் வந்து விடும்;கிழே இறங்கி விடலாம் என்று என் வாயை கிண்டினார். நான் உள்ளே ராஜேந்திரகுமார் கதையில் வருவது போல் "ஙே" என்று விழித்தாலும் , அரசு போல் "ஹி ஹி" என்று வழிந்து , ஒரு பதில் கேள்வி கேட்டு தப்பித்தேன்.அது என்ன என்பது பின்னொரு நாளில் வெள்ளித் திரையில் காண்க.....

Google-ல் போய் தேடாமல், பந்தை மேலே தூக்கி போடாமல், பதில் முன்பே தெரிந்தவர்கள் அடுத்த ஜென்மத்தில் பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள். (நன்றி பாரா)

6 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

பூமி என்று சொல்லப்படுவது நிலமும் அதற்கு மேல் உள்ள வளிமண்டலமும் சேர்த்துத் தான் என்று நினைக்கிறேன்.எல்லாமே சேர்ந்து சுற்றுவதால் இப்படி நடக்காமல் போயிருக்கிறது

Anonymous said...

anamika meand anonymous right? correct me if i am wrong thaliva! :D

Mey said...

You are right. anamika means anonymous.

குசும்பன் said...

appa anamikathaan anonymousa vanthu yen sitela kusumbu senjathaa? thala suthuthuthE...

Mey said...

இந்த குசும்பாட்டத்துக்கு நான் வரலை.

ஈழநாதன்(Eelanathan) said...

இப்போது சரியான(சரியென்று நான் நினைக்கும்)பதிலை சொல்லுகிறேன்.
ஒரு வண்டியொன்று சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது உள்ளே நிற்கும் நீங்கள் கையிலுள்ள பந்தை மேலே தூக்கிப் போடுகிறீர்கள் அது திரும்பவும் சரியாக உங்கள் கையிலேயே வந்து விழுகின்றது ஏன்?வண்டியின் வேகத்துக்கேற்ப அது கடந்து செல்லும் தூரத்திலல்லவாவிழ வேண்டும்.
பந்தில் தாக்கும் இரு விசைகளில் ஒன்றான நிலைக்குத்து விசைகளில் மேலே எறியும் விசை புவியீர்ப்பு விசையை விட அதிகமாக உள்ள போது பந்து மேலே போகின்றது அதனை விட புவியீர்ப்பு அதிகமாகும் ஒரு நிலையில் அது கீழே வருகின்றது.
கிடை விசை வண்டி சீரான வேகத்தில் செல்லும் வரை மாறாது அதனால் கிடை விசை எதுவும் தாக்காததால் பந்து எறிந்த இடத்திலேயே திரும்பவும் விழுகிறது