வழிப் போக்கன் நான்
செல்ல வழி தேடி திகைக்கிறேன்.
வழியெங்கும் வழிகாட்டிகள்
அவை காட்டும் வழிகள் பல
புதையல் தேடி புதைந்த வழி ஒன்று
உச்சி மலை ஏறி உருண்ட வழி ஒன்று
பரமபத ஏற்ற இறக்கம் பழகி தந்த வழி ஒன்று
போதிமரமென புளிய மரமடைந்த வழி ஒன்று
செக்குமாடாய் சுற்றி வந்த வழி ஒன்று
எந்த வழி சென்றாலும்
இறுதி ஒன்றுதான்...
இலக்கில்லாமல் நான்.
வந்த வழி எண்ணி
வைக்கிறேன் நானும் ஒரு வழி காட்டி
Thursday, June 10, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
யோவ் நீங்க கீழ கேட்ட கேள்விக்கு பதில் தெரியாம ஙே'ன்னுருக்கேன். அதுக்கு முதல்ல வழி சொல்லும்.
கவிதை மிக நன்று. என்னுள்ளும் இந்த சிந்தனை உண்டு.
வழிதேடி நல்லதொரு தேடல்
Post a Comment