மைக்ரோசாப்ட் நிறுவனர் பால் அலெனின் பண உதவியுடன் செய்யப்பட்ட விண்கப்பல்ஒன்று (SpaceShipOne) வெற்றிகரமாக பறந்து சசாதனை புரிந்துள்ளது. 10 வருட கடின் உழைப்பு தந்த சாதனை இது.
3 நபர்களை பத்திரமாக பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் அனுப்பி உயிருடன் மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும் ( 2 வாரத்திற்குள் , அதே விண்கலத்தில் அந்த சாதனையை திரும்ப செய்ய வேண்டும்) விண்கலத்தை தாயரிக்கும் நிறுவனத்திற்கு
காத்திருக்கிறது 10 மில்லியன் பரிசுத் தொகை. இந்த முயற்சி அந்த பரிசுத் தொகையை குறி வைத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுப் போட்டி , ஆராய்ச்சிகளை ஊக்குவித்து, எல்லாருக்கும் வாண்சுற்றுலா கட்டுபிடியாகும்படி செய்வதே அதன் நோக்கம்.
2020 வருடத்தில் 100,000$க்கு டிக்கெட் கிடைக்கும் என்கிறார்கள். Priceline-ல் முயற்சி செய்தால் கொஞ்சம் cheap-பாக கிடைக்கலாம்.
நம்ம இதிகாசங்களில் வருகின்ற விமான வகைகளையும் , அஸ்திரங்களையும் (missile) பார்க்கும் போது ,எனக்கென்னவோ இந்தியாவில் அந்த காலத்திலேயே இத்தகைய சாதனையுல்லாம் செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று நம்புகிறேன்.கிடைத்தால் 10மில்லியன் நாமும் claim- பண்ணலாம்.
"உலகை முதலில் சுற்றி வந்தது யார் என்று அறிவியல் பரீட்சையில் கேட்டால் , ஏதாவது வாய்க்குள் நுளையாத பெயரை எழுதாமல் , முருகன் என்று எழுதுணும்டா " என்று எங்கள் தமிழாசிரியர் கம்பீரமாக முழங்குவார்.
அந்த காலத்திலேயே நாம எல்லாம் கண்டு பிடுச்சிட்டோம். எதையும் முறையாய் எழுதி வைக்காமல், மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் நம்ம சமுதாயத்தின் அரிய கண்டுபிடுப்புள் எல்லாம் அழிந்து விட்டது என்று வருத்தப்படுவார்.
"அர்த்தமில்லாமல் நாம செய்கிற பல விஷயங்களுக்கு ரொம்ம மெனக்கெட்டு அர்த்தம் கண்டிபிடித்து அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் மாதிரி , அறிவியல்பூர்வமான இந்திய வரலாறு என்று நீங்கள் யாரவது எழுதணும்டா" என்று வேண்டுவார்.
கம்பராமாயணத்தில் , இராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது, விமானம் ஓடிச்சென்று மேல் எழும்பியது என்று takeoff பற்றி விவரித்திருக்கிறார் என்று ஒருமுறை நண்பர் ஒருவர் கூட சொன்னார் .
அதை படிக்காமல், சென்ற நூற்றாண்டில் விமானம் கண்டு பிடிக்க முயற்சி செய்தவர்களெல்லாம் , மலையிலிருந்து குதித்து விமானத்தை பறக்க விட முயற்சித்தார்கள். பல முயற்திகளிக்கு பின் தான் runway/takeoff மகத்துவம் புரிந்தது அவர்களுக்கு என்று
சொன்னார். எனக்கு கம்பராமாயணம் படிக்கும் அளவுக்கு புலமையில்லாததால் அவர் சொன்னதை சரி பார்க்கவில்லை.ஆனால் அவர் சொன்ன விஷயம் என் பழைய நம்பிக்கையை வளர்த்தது. அந்த நம்பிக்கையில் நானும் , என்னை போல் நம்பும் நண்பர் ஒருவரும்
செய்த தேடலில் ( வேறெங்கே , இணையத்தில் தான் அந்த தேடல்) கிடைத்த தகவல்களை பின்னொரு நாளில் பதிகிறேன்.
இப்படி பழங்கதை பேசி , தொல்பொருள் ஆராய்ட்சி செய்து தான் இத்தகைய பரிசுகளை வாங்க எண்ண முடியும் என்ற காலமெல்லாம் கரையேறி , உலக அளவிலான போட்டிகளில் நம்மவர்கள் கலந்து கொள்வதை படிக்குக் காலம் விரைவில் வரும் ( வந்து விட்டது என்று சிலர் சொல்வது கேட்கிறது).
Monday, June 21, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//நம்ம இதிகாசங்களில் வருகின்ற விமான வகைகளையும் , அஸ்திரங்களையும் (missile) பார்க்கும் போது //
எரிக் வான் டானிக்கன் பற்றித்தானே சொல்கிறீர்கள்?
அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி தரமான இலக்கியமும் நாம் இழந்திருக்கிறோம். கறையானுக்கு காவு கொடுத்திருக்கிறோம். ஆவலுடன் இருக்கிறேன். உனது ஆராய்ச்சி முடிவு காண..
எரிக் வான் டானிக்கன் "கடவுளின் ரதங்கள்" பற்றியும் உண்டு. ஆனால் நான் குறிப்பிட்டது பெரும்பாலும் பண்டைக்கால இந்தியாவின் சரித்திரத்திலிருந்து. குறிப்பாக மகரிஷி பரத்வாஜ் எழுதியதாக சொல்லப்படுவது.
Post a Comment