Wednesday, July 07, 2004

லு டாப்ஸ்

லு டாப்ஸ் (Lou Dobbs) சிஎன்என்னில் நேற்றைய "Moneyline" / இன்றைய "Lou Dobbs
Tonight" நிகழ்ச்சியை திறம்பட நடத்துபவர். 2001-ல் சிஎன்எனின் "Moneyline" நிகழ்ச்சிக்கு திரும்ப பொறுப்பெடுத்த போது வணிகத்தை பற்றி அதிகம் பேசாமல் , அரசியல்/ பொது நிகழ்ச்சிகளை பற்றி , அதிகம் பேசுகிறாரே என்று நினைத்த போது , அதன் பெயரையே "Lou Dobbs Tonight" என்று மாற்றி விட்டார்கள்.

சமீப காலமாக "Exporting America" அவரது நிகழ்ச்சியில் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு அங்கமாகி விட்டது.சம நிலைப்பாடை எடுக்காமல் , சரியோ/தவறோ அவரது ஒரு நிலைப்பாடான கருத்தை திணிக்கிறாரே (மைக்கேல் மூர் போல) என்று நினைத்து கோபமடைந்ததுண்டு. ஆனால் அவர் சொல்வதிலும் சற்று நியாயம் இருப்பது புரிந்தது.

பொதுவாக நிகழ்ச்சியை வழங்குபவர்கள் , வாதம்/எதிர்வாதம் செய்ய ஒரு கருத்தின் இரு புறம் உள்ளவர்களை அழைத்து , விவாத்தை நடுநிலை தவறாமல் நடத்தி செல்வார்கள். இல்லாவிட்டால் "Meet the Press" Tim Russert மாதிரி ஒருவரை அழைத்து , அவரது நிலைப்பாட்டிற்கு எதிர் நிலையில் இருந்து கேள்விகள் கேட்டு உண்மையான பதிலை வரவேற்பார்கள். ரபி பெர்னார்ட் கூட இது மாதிரி சிறப்பாக செய்து வந்தார் ( அம்மாவிடம் பேட்டி காணும் போது காட்டிய பவ்யம் தவிர).

மைக்கேல் மூர் கருத்தை ஆதரிக்க முடிந்த நம்மால் , ஏன் லு டாப்ஸ் சொல்வதை ஆதரிக்க முடியவில்லை?.(ஜீன்களின் வேலையாக இருக்குமோ?)

குப்பனும் , சுப்பனும் செய்கிறான் என்று , வேலையை கண்மூடித்தனமாக ஏற்றுமதி செய்யாமல் , அவரவர் தொழிலின் தேவைக்கேற்ப செய்ய வேண்டும். தொழிலாளர் , சுற்றுச் சூழல் சட்ட திட்டங்களும் ஏறத்தாழ சமமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப "Most Favored Nation" / Tax System இருக்க வேண்டும்.அப்பொழுது தான் "Global Work Force" என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் இருக்கும்.

1 comment:

-/பெயரிலி. said...

லூ டாப் இன் நிகழ்வு பற்றி நீங்கள் சொல்வது ஓரளவுக்குச் சரியானதே. அவரின் கூற்றுப்படி அவரின் நிலைப்பாடு, "அமெரிக்க வேலையை அமெரிக்கர்களுக்கு வைத்துக்கொள்" & "பிறநாட்டிலிருந்து அமெரிக்கா திருட்டுத்தனமாக வந்தவர்களைத்தான் நான் சாடுகிறேன்; ஒழுங்காக வந்து தொழில் புரிகின்றவர்களை அல்ல."

ஆனால், அதே சமயத்திலே, பிபிஸி, என்பி ஆர் , பஸிபிக்கா வானொலி போன்றவை இந்தியாவிலே, மெக்ஸிகோவிலே, சீனாவிலே உள்ள தொலைல்வினைஞர்கள் எந்தவிதத்திலே இந்தத்தொழில்இடம்பெயர்வினாலே அவமதிக்கப்படுகின்றார்கள் என்பதைக் காட்டுகின்றதைப் போலக்கூடப் பேசுவதில்லை. அதுவே கொஞ்சம் உறைக்கிறது.