பட்டாசு வெடிக்கும்
என் ஆசை
பட்டுச் சேலை கட்டிய அம்மாவிற்கு
ஏன் புரிவதில்லை?
பட்டுக் கரங்கள்
நெருப்பு பட்டு விடுமென்று
வேடிக்கை பார்க்கச் சொல்லி
வெடிக்க சொல்வது
வேலைக் காரர்களை...
வெடிப்பதை விட
விழும் குப்பையிலும்
வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலும் தான்
இவர்களின் பெருமிதம்!
வெடிப்ப்து நானில்லை என்று
தெரிந்து வெடிக்காமல்
நீ குப்பையில் ஒதுங்குவது
குப்பையை கிளறும்
சிறுவர்கள் பின்னாளில்
வெடித்து மகிழவோ?
சிவகாசி சிறார்களின்
கைபட்டதாலா உனக்கு
சிறுவர்களின் மனம் புரிந்தது?
Wednesday, July 14, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அற்புதமான கவிதை. கருத்திலும் படிவத்திலும் முழுமையான கவிதை.
எழுதியவற்றில் என்னை தாக்கிய கவிதை.
தொடர்ந்து தாக்கு.
Post a Comment