நரகத்தை நம்பும் நாடுகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் , ஊழல் குறைவாக இருப்பதாகவும் Federal Reserve Bank of St. Louis ஆய்வு அறிக்கை கூறுகிறது.அமெரிக்காவில் 71 விழுக்காட்டினர் நரகம் இருப்பதை நம்புவதாகவும் , அதனால் ஊழல்/தவறு செய்வதை தவிர்ப்பதாகவும் சொல்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கை மதநம்பிக்கைகளை வளர்க்க சில மதவாத நிறுவனங்களால் செய்யப்பட்ட முயற்சி என்று சிலர் குற்றம் சாட்டவும், இந்த பகுதி அறிக்கையில் மாற்றப் பட்டு விட்டது.
நான் குழந்தையாக இருந்த போது , நரகத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வறுக்கும் படங்களையும் , மற்ற கொடுமைப் படுத்தப் படும் படங்களையும் பார்த்து சில நாட்கள் பொய் பேசாமல் இருந்ததுண்டு. அதெல்லாம் சில நாட்களே.... .
சொர்க்கத்திற்கு போனா தனியா போரடிக்கும் . நரகம் என்றால் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் . என்ன ? நான் சொல்றது சரிதானே..
அமெரிக்காவில 71 % நரகத்திற்கு பயப்படுகிறார்களா ???!!!!
Wednesday, August 04, 2004
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னங்க இதெல்லாம் அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியா?(ரெண்டையும் படிக்கலை)
காலநிலை, இயற்கை வளம், பூமிப்பந்தில் நாடுகள் இருக்கும் இடம்(with reference to equator) இதுக்கெல்லாம் அப்புறந்தான் மக்களும் பாழாப்போன மதமும் வரணும். என்னமோ போங்க.
//அமெரிக்காவில 71 % நரகத்திற்கு பயப்படுகிறார்களா ???!!!!//
athaanae! :p
Post a Comment