Friday, October 01, 2004

எரிமலை எப்படி பொறுக்கும்

எங்க ஊர் எரிமலை ஹெலன்( அந்த கால ஆட்ட நாயகி பேர் மாதிரி இருக்கா?)ஸ் கொஞ்சம் குமுற ஆரம்பித்திருக்கிறது.சிவப்பு மல்லி படத்தில் , சந்திர சேகர் தொண்டை நரம்புகள் தெரிக்க உணர்ச்சி பூர்வமாக "எரிமலை எப்படி பொறுக்கும்" என்று எரிமலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட் சொந்தகாரர்கள் மாதிரி வாயசைத்து செல்வார்.நேரில் பார்த்த போதுதான் , இயற்கையின் உக்கிரம் தெரிந்தது. இப்பொழுதெல்லாம் சீஸ்மோகிராப் வைத்து கிட்டத்தட்ட எப்பொழுது எரிமலை வெடிக்கும் என்று அபாய அறிவிப்பு முன்னெச்சரிக்கை கொடுத்து விடுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் பல மனிதர்கள் எரிமலை மாதிரி அவ்வப்பொழுது வெடித்து விடுகிறார்கள். அதெற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கிடைத்தால் நன்றாக இருக்கும்.
http://www.fs.fed.us/gpnf/mshnvm

1 comment:

Selva said...

உங்கள் ஊரில் உள்ள எரிமலை போல் நீங்களும் எப்பொழுதாவது தான் வலையில் வெடிப்பீர்களோ ? வேலை பளுவோ ?