Sunday, April 16, 2006

தமிழ் புத்தாண்டு

வட மொழி தாங்கி வரும் 60 வருட சுழற்சி தமிழ் பஞ்சாங்க முறை மற்றும் இன்றைய கால கட்டத்தில் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு தினம் , உண்மையிலேயே தமிழரின் புத்தாண்டு இல்லை என்று எப்பொழுதோ படித்த திராவிட கழக பத்திரிக்கை கட்டுரை ஒவ்வொரு முறையும் ஞாபகம் வந்து விடும். ஆனால் இந்தியா முழுவதும் பல வடிவங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது பற்றிய மின்னஞ்சலை படித்த பொழுது , தமிழ் புத்தாண்டாய் பண்டைய காலத்தில் கொண்டாடப் படாவிட்டாலும், வேறு ஏதோ ஒரு வகையில் திருநாளாய் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வருடம் விடுப்பு எடுத்து சிறப்பாக தூக்கம் போட்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடினேன்.

அஸ்ஸாமில் ரங்கோலி உத்சவ்
பிகாரில் வைஷாஹா
கேரளாவில் விஷு
பஞ்சாபில் பைசாஹி
மேற்கு வங்காளத்தில் நப பர்ஷோ
ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி
மஹாரஷ்டிரத்தில் குடிபட்வா
ஒரிஸ்ஸாவில் மஹாவிசுப்ஹ சங்கராந்தி

6 comments:

துளசி கோபால் said...

இதில் குடிபடவா & யுகாதி இரண்டும் சந்திரக் கேலண்டரை பின்பற்றி வருவதால் வெவ்வேறு நாட்களில் வரும்.
ஆனால் விஷு, தமிழ்ப்புத்தாண்டு, வைஷாகி இவை எல்லாம் சூரியக் கேலண்டர். ஆகவே எப்போதும் ஒரே நாளில் வருகின்றன.

மற்றவைகளைப்பற்றி அவ்வளவாக விவரம் தெரியவில்லை. இவைகளைப் பற்றி சில வருடங்களுக்குமுன்பு தமிழருவிக்காக எழுதியிருந்த
கட்டுரை நினைவுக்கு வந்தது. தேடிப்பார்க்கிறேன், கிடைத்தால் என் துளசிதளத்தில் இடலாம்.

எது எப்படியானாலும், பண்டிகைக்காலமாச்சே. வாழ்த்து(க்)கள்!

கொழுவி said...

அப்படியே சிங்களவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தென்கொரியாவோ தென்னாபிரிக்காவோ, அங்கேயும் இதேநாளில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

கொண்டாட்டம் என்றவகையில் சரிதான். ஆனால் தமிழ் என்ற அடையாளத்தை அதற்குக் கொடுக்கும்போது யோசிக்க வேண்டியிருக்கிறது.

Mookku Sundar said...

ஆமாம் மெய்யப்பன். கலைஞர் சன் டீவி கவியரங்கத்திலும் சொன்னார்.

குசும்பன் said...

//சிறப்பாக தூக்கம் போட்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடினேன்//

ஓ தமிழ் புத்தாண்டா? Happy New Year'ங்க :-)

தகடூர் கோபி(Gopi) said...

//இந்த வருடம் விடுப்பு எடுத்து //

எதுக்குங்க விடுப்பு எடுத்தீங்க.. தமிழ் புத்தாண்டுக்கு இல்லைன்னாலும் Good Fridayக்காக விடுமுறை தானே? உங்களுக்கு இல்லையா?

Mey said...

இங்க புனித வெள்ளிக்கும் விடுமுறை இல்லை...