Thursday, February 17, 2005

சாகாவரம்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இன்னும் 20 வருடத்தில் சாகாவரம் சுலபமாக கிடைக்கும் என்கிறார்.
நம்ம ஊர் தினத்தந்தியில் வரும் சித்த வைத்தியர் இல்லை இவர். இது நாள் வரை புகழ்பெற்ற ஆராய்சியாளர்.நான் வேலை புரியும் நிறுவனத்திற்கு , 2 வருடங்கள் முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளராக தலைமையுரை ஆற்ற வந்திருந்தார்.மிகச் சிறப்பாக பேசி அனைவரையும் மெய்மறக்க செய்தார். திடீரென்று இப்படி 10 குவளை தேநீர் , அது இது என்று சாகாமல் இருக்க மருந்து கண்டுபிடிக்க இறங்கி விட்டார்.
பணம் பத்தும் செய்யும் என்பது போல பயம் பத்தும் செய்யும் போலும்.

இது வரை கட்டிய Life Insurance premium எல்லாம் வீணாக போய் விடுமோ?

1 comment:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

சாகாவரம் வாங்கும் நிலைக்கு இன்னமும் நமது விஞ்ஞானம் வளர்ந்து விட வில்லை மெய்யப்பன். இப்பொழுதே நம்மை சாக விடாமல் எல்லா மருந்துகளையும் கண்டு பிடித்து குறைந்தது என்பது வயது வாழ்வதற்கு வழி வகுத்து விட்டார்கள். நாம் மருந்துகளின் உதவியோடு மனிதர்கள் உதவியோ, அனுசரனையோ இல்லாத மக்கள் (முதியவர்கள்) பலரைப் பார்க்கிறோம். அவர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. :-(