Tuesday, June 21, 2005

பசித்திரு! விழித்திரு!!

ஸ்டாண்போர்டு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆப்பிள் நிறுவன இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ் "Stay Hungry. Stay Foolish" என்று மாணவர்களிடம் கூறியுள்ளார்.நண்பர் ஒருவர் , அதை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.அவருக்கு அநேக கோடி நன்றிகள்.

மிக அருமையான கருத்துக்கள் அடங்கிய பேச்சு அது. மூன்று குட்டிக் கதைகளில் , உணர்வுபூர்வமாக , அருமையான கருத்துக்களை மாணவர்களுக்கு பொருத்தமாக சொல்லியிருக்கிறார்.


என்னை கவர்ந்த சில பகுதிகள்

வாழ்நாள் குறைந்தது , அதை மற்றவர்களின் கருத்திற்காக வாழாதே!

உன் வாழ்நாளில் பெரும் பகுதி உன் வேலையில் சென்று விடும் , அதனால் உனக்கு உண்மையில் பிடித்ததை வேலையாக செய்

தினம் இன்று தான் வாழ்க்கையின் கடைசிநாள் என்று வாழப் பழகு ( ஒரு நாள் உண்மையாகும்). உன் கடைசி நாளில் செய்யத் தகுந்த செயல் தானா நீ இன்று செய்வது என்று எண்ணி செயல் படு.


எழுத்து வடிவம்
http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505

ஒலி வடிவம்
http://news-service.stanford.edu/news/2005/june15/videos/53.html

ஒளி/ஒலி ( சிறு பகுதி மட்டும்)
http://news-service.stanford.edu/news/2005/june15/videos/51.html

7 comments:

எண்ணச்சிதறல்கள் said...

சுட்டிக்கு நன்றி அனாமிகா. மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், எவருக்கும் பொருந்தும் கருத்துக்கள்.

அன்பு said...

இந்த விழா தொடர்பாக முன்னர் அருணா எழுதியிருந்தார்...

சுட்டிகளுக்கும், மேலும் தகவலுக்கும் நன்றி.

உன் வாழ்நாளில் பெரும் பகுதி உன் வேலையில் சென்று விடும் , அதனால் உனக்கு உண்மையில் பிடித்ததை வேலையாக செய்

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். நம்மில் வெகுசிலரே இதைப்புரிந்து செயல்படுகின்றனர் - நானும் அவ்வாறு இல்லை, முயற்சிசெய்கிறேன்!

NambikkaiRAMA said...

நானும் இதை குறித்து அருணாவின் பதிவில் பார்த்தேன். தாங்கள் தந்த மற்ற சுட்டிகளுக்கும் நன்றி! "நம்பிக்கை" குழுமத்தில் இதையும் இட உங்கள் அனுமதியை நாடுகிறேன். நன்றி!

BALA said...

read the link. very inspiring one.

Mey said...

அருணாவின் பதிவை இப்பொழுது தான் படித்தேன்.அருமையாக எழுதியுள்ளார்கள்.சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கு நன்றி.
ராமா தாராளமாக "நம்பிக்கை" குழுமத்தில் இந்த சுட்டியை இடுங்கள்.ஆங்கில பதிவுகளில் , இந்த பேச்சைப் பற்றி பலர் எழுதியுள்ளார்கள்.இணையத்தில் தேடினால் , இன்னும் பல கிடைக்கும்.

Anonymous said...

Mey,

It was so impressive.....

இராதாகிருஷ்ணன் said...

சுட்டிகளுக்கு நன்றி! படித்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் பலசமயம் பிறருக்காகவும், நம்மை ஏதோ வழியில் நிர்பந்தித்துக் கொண்டே வாழ்கிறோம். 'பிடித்ததை வேலையாகச் செய்'ய நினைக்கும் போது வயது முடிந்திருக்கும்!