வர்ணம் தீட்டப்படாத
வானவில்
வானவெளியில்
என்றென்றும்!
மீட்டாத வீணையின்
நாதம்
செவியில்
என்றென்றும்!!
மொழியில் அடங்காத
சொல்
நாவினில்
என்றென்றும்!!!
நிறைவை அறியாத
மனிதத்துவம்
வெறுமை என மறுகுவது
எந்த தர்க்கத்திலும்
அடங்காத
சாஸ்திரம்
விழியில் அடங்காத
விஸ்வரூபம்
என்று புரியும்!!!
Wednesday, July 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மெய்யப்பன்,
நவீன கவிதைகளின் வடிவங்கள் உன் வசப்பட தௌவங்கிவிட்டன. எழுப்பும் கேள்விகள் நெற்றியில் அறைகின்றன.
இன்னும் பல கேள்விகளை எழுப்புவாய் என நம்புகிறேன்.
அன்புடன்
ராஜ்குமார்
வசப்பட துவங்கிவிட்டன என்பது கேவலமாய் மாறிவிட்டது. மன்னிக்கவும்.
நன்றி ராஜ்குமார்!!!
Post a Comment