Saturday, November 19, 2005

பீட்டர் ட்ரக்கர்

நாளைய நிர்வாக துறையில் தோன்றக் கூடிய போக்குகள் இன்றே தெரியும் மந்திரக் கண்ணாடி போலும் அவரது மூக்கு கண்ணாடி என்று குறிப்பிடும் படியான ஆளுமை படைத்தவர் பீட்டர் ட்ரக்கர் (Peter F. Drucker).

சில வருடங்களுக்கு முன் சிஎன்என்னில் அவரைப் பற்றிய விவரண படத்தை பார்த்த மாத்திரத்தில் , அவரது கட்டுரைகளையும் , புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.
காலங்களை கடந்த சிந்தனையோட்டம் அதில் தெளிவாக தெரியும்.நிர்வாக மேலாண்மை மட்டுமின்றி , சமூக , பொருளாதார மாற்றங்களையும் அலசும் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. சேவை நிறுவனங்களை நிர்வாகிப்பது மற்றும் அவற்றின் தாக்கம் பற்றிய அவரின் கருத்துக்கள் , புதிய பார்வையை தந்தது.

வர்த்தக மேலாண்மை பட்டப் படிப்பு படித்திராத என்னைப் போன்றோர்க்கு , படிக்கத் தூண்டும் பயனுள்ள பல படைப்புகள் தந்தவர். மேலும் இன்று என்னைப் போன்றோருக்கு சோறு போடும் "Knowledge worker" என்ற பதத்தை தந்தவர். அண்மையில் தனது 95வது வயதில் நிறைவான வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை முற்றிலுமாக நிறைவடைந்தார்.

1 comment:

Mookku Sundar said...

தகவலுக்கு நன்றி மெய். உன்னுடைய விருப்பங்களும், வேலையும் சந்திக்கும் பாக்கியம் உனக்கு..!! கடவுளுக்கு நன்றி. !!!