Monday, November 07, 2005

கடற் கன்னி

சாண்டில்யன் கதை மாதிரி தலைப்பை பார்த்தவுடன் , இதை மேலும் படிக்க கிளிக் செய்ய நினைப்பவர்கள் மன்னிக்க.இது சென்ற வாரம் , கடற்கன்னி கதைகளை படைத்த ஹான்ஸ் கிர்ஸ்டின் ஆண்டெர்சன் சொந்த நாட்டிற்கு நான் அலுவல் நிமித்தம் சென்ற பயணக் க(கு)ட்டுரை.


சென்ற வாரம் அலுவல் நிமித்தம் கோபன்கேஹன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் சென்று பார்த்தது அங்கு இருந்த கடற்கன்னி சிலையை தான்.அமெரிக்காவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ,இதை பார்க்க வரும் முன் , வழிகாட்டுபவரிடம் ,இதை ஏறிப் பார்க்க , மின் தூக்கி இருக்கின்றதா என்று விசாரித்துக் கொண்டே வருவார்களாம்.இந்த இடத்தைப் பார்த்தபின் , அசடு வழிவது சகஜம் என்று அலுவலகத்தில் ஒருவர் சொன்னார். கடற் கன்னி சிலை நம்மை விட சிறியதாக இருக்கும்:)

கோபன்கேஹன் டென்மார்க்கின் தலை நகரம். குழந்தைகளுக்கு லெகோ ப்ளாக் , வளர்ந்த குழந்தைகளுக்கு கார்ல்ஸ்பெர்க் , மற்றவர்களுக்கு குக்கி என்று ஏதாவது ஒரு வகையில் டென்மார்க் பரிச்சயமான நாடு தான்.

ஆனால் நான் அறியாதது , (கடற்கன்னியை தவிர) மிதிவண்டிகளின் தலை நகரம் இது என்பது தான்.எங்கு பார்த்தாலும் சைக்கிள்கள் தான். டென்மார்க்கின் மொத்த மக்கள் தொகை ( 6 மில்லியன்) கிட்டத்தட்ட சிங்கப்பூர் அளவு தான்.மக்கள் தொகை அளவிற்கு சைக்கிள்களின் தொகையும். அது தவிர தலைசிறந்த கட்டிட நிர்மாணிகள் , கலை ல்லுனர்கள் இங்கு அதிகம் போலும். கடந்த 1000 வருடங்களின் தலைசிறந்த பல கட்டிட கலைகளையும் ஒருங்கே காணலாம்.

மற்றொரு ஆச்சர்யம் பயணம் செய்த இரயிலில் ஒவ்வொரு முறையும் , பரிசோதகர் வந்து 100% டிக்கெட்டை பரிசோதித்தது தான். ( ஹிஹி. என்னை மட்டும் இல்லை. எல்லாரையும் தான்.)

4 comments:

Mookku Sundar said...

கோபன்ஹேகன் "மஜா"வான் ஊர் என்று வாத்தியார் கதிகளில் படித்ததாக ஞாபக்ம். அது சரி. நீங்கள் எங்கே அங்கெல்லாம் போயிருக்கப் போகிறீர்கள். சமத்தா பில் மாமா சொன்ன வேலையைப் பாத்துட்டு திரும்பி வந்திருக்கப் போறீங்க. :-)

b said...

படங்காட்டுங்க மெய்யப்பன்.

ஜெ. ராம்கி said...

//ஒவ்வொரு முறையும் , பரிசோதகர் வந்து 100% டிக்கெட்டை பரிசோதித்தது தான்.

ada namma pettai thevalame..! ippadiyellam check pannina... nattula makkal eppadi nadamadrathu..?! :-)

Mey said...

கார்ல்ஸ்பெர்க் பாத்த போதே மூக்கர் அந்த காலத்தில தண்ணிய தொட பண்ணிய பிகு ஞாபகம் வந்துச்சு!!! மஜா நமக்கெல்லாம் படத்தில தான்.
வெளிநாடு போகும் போது கேமிரா கொண்டு போகாத ஓரே ஆள் நான் என்று மொத்து வாங்கறது மூர்த்திக்கு கேட்டிடுச்சோ!!!
ராம்"சாவி" கேட்ட கேள்வி தான் எனக்கும். டிக்கெட் எடுத்து தான் ரயில் போக வேண்டும் என்பது அடிப்படை உரிமையில கைவைச்ச மாதிரியில்ல.