Wednesday, January 11, 2006

கலவை மனிதன்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இயற்கைக்கு அப்பாற்பட்ட மனித வாழ்க்கை பற்றி எழுதியிருக்கிறார்.

மனித மூளை சிந்திப்பதை படமெடுக்க தொடங்கி விட்டார்களாம். ஒரு கன அங்குல நானோ ட்யூப் மின்சாதனம் 100 மில்லியன் மனித மூளைகளை விட சிறப்பாக செயல்பட தொடங்கி விடுமாம்.நானோபோடிக் வெள்ளை அணுக்கள் உயிரியல் வெள்ளை அணுக்களை விட வேகமாக செயல் பட தொடங்கி , அவற்றை மனித உடம்பிற்கும் கலந்து விடும் சாத்தியக் கூறு வரும் போது , மனிதன் பாதி கணினி பாதி கலந்து செய்த கலவை நான் என்று எல்லாரும் ஆளவந்தான் மாதிரி திரிய வேண்டியது தான்.

மனிதனுக்கு தான் சிரிக்க தெரியும் , பகுத்தறிவு உண்டு என்று கப்ஸா விட்டுக் கொண்டு காலம் தள்ள முடியாது. மனிதனின் பகுத்தறிவு பழுது பட்டது. பாங்குகளை அடையாளம் காணும் (pattern recognition) கலை மட்டும் தான் நம்மை இன்னும் வேறுபடுத்தி வைத்திருக்கிறது போலும்.

கலவை மனிதனால் கவிதை எழுத முடியுமா , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வீண் வாதிட முடியுமா என்று தெரியவில்லை.

மேலும் படிக்க http://www.computerworld.com/hardwaretopics/hardware/story/0,10801,107494,00.html

1 comment:

Mookku Sundar said...

//கலவை மனிதனால் கவிதை எழுத முடியுமா , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வீண் வாதிட முடியுமா என்று தெரியவில்லை//

தூள் கெளப்புங்க சார். நல்ல form :-)