Monday, December 18, 2006

காணாமல் போகும் தந்திரம்

காணவில்லை
ஆறாம் வகுப்பு பூதலிங்கத்தை
கலங்கியது நண்பர் கூட்டம்..

வறுமையால்
அத்தை வீட்டில்
படித்து வந்தவனை
பிச்சை எடுக்க
கடத்தியவன் எவனோ?

காணாமல் போகும் பயம்
காணத் தொடங்கியது அனைவரிடமும்

பிள்ளை பிடிப்பவன்
பூசிய விபூதி
வியர்வையில் வசியம் அழிய
தப்பிய பூதலிங்கம்
தாய் தந்தையோடு
இப்பொழுது என
கசிய தொடங்கியது சேதி..

பள்ளி நேரத்தில் கூட
பாத்திரம் விளக்கியவன்
பயத்தையும் விலக்கினான் !
சமூகத்தையும் விளக்கினான் !!
விபூதியில் அல்ல விஷயம் !!!

3 comments:

Divya said...

நல்லா எழுதியிருக்கிறீங்க, ஆனா பொருள் புரியலீங்க

Mey said...

நன்றி திவ்யா! தங்களின் உண்மையான கருத்திற்கு

அத்தை வீட்டில் படிப்பதற்காக வந்து , வேலையாளாய் பாத்திரம் தேய்து கஷ்டப்பட்டவன்
காணாமல் போய்விட்டதாக சொல்லி அப்பா அம்மாவிடம் போய் சேர்ந்தான்.
காணாமல் போனவர்களில் பாதி பேர் அறிந்தே செய்வதே , மந்திரத்தால் அல்ல.

rajkumar said...

அற்புதமான கவிதை.

தாமதமாக பார்த்ததற்கு மன்னிக்கவும்.

அன்புடன்

ராஜ்குமார்