Saturday, March 22, 2008

இடற் கல்

காலில் இடறிய
கல்லை உதைத்தேன்
வேகமோ , கோபமோ..

எதிரே விழுந்து விளித்தது
மீண்டும் உதை பட

விடாமல் வீடு வரை
விரட்ட விளைந்தேன்
அதனால்
வழி நெளிந்தது!

வீண் வேலையென
விட்டு தொடர்ந்தேன்
எதையோ இழந்த
தவிப்பு தொடர்ந்தது!


கண்ணில் பட்டது
மற்றொரு கல்.
சற்றே விலகிய
தொலைவில்...

3 comments:

sury siva said...

கருவறையில் அன்றொருவன் உள்ளே சென்றான்.
' நீ கல் ' என்றான்.
எதிரொலியும் ' நீ கல் ' எனவே
திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
எதிரொலி தொடர்ந்தது.
நான் சொன்ன கல்
வினைச் சொல் என்று.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு; உங்கள் கவிதையில் ஒரு எதிர்காலக் கண்ணோட்டம் இருக்கிறது.
futuristic hence realistic . வாழ்த்துக்கள்.

http://arthamullavalaipathivugal.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

தென்றல்sankar said...

nalla oru thavipppu

சின்னப் பையன் said...

நல்லா இருந்தது!!!