சுட்டெரித்த சூரியன்
சூட்டிக் கொடுத்த
மாலை மலர
சுகந்தமாய் மதி
பணி தொடர்ந்த நேரம்!
கண் கெட்ட பின்
சூர்ய நமஸ்காரமாய்
காலம் கடந்து
தொடங்கிய நடைப் பயிற்சி
தொடர்ந்தேன் அன்று!
அண்டை அயல் பாரது
தன்னை மட்டும் பார்த்த
வேகப் பயணத்தில்
சட்டென முகத்தில்
பட்டது ஈரப் பதம்!
யாரின் எச்சில்
என அசூசையாய் நிமிர
சடசடவென சாரல் ...
கோவர்த்தனமாய்
குடை பிடிக்க கிட்டாத
அவலத் தனம்
ரசிக்கத் தொடங்கியது
தொப்பலாக்கிய மழையை!
நாளைய நகரின்
திரிவேணி சங்கமங்கள்
சாலையோரம்
சங்கடப் படுத்த
அவசரமாய்
வீட்டை அடைந்த மகிழ்ச்சி
அதற்குள்
நின்று விட்டிருந்தது
அன்றைய சாரல்!
எப்பொழுதோ
கடந்து சென்ற
ஆற்றுப் பாலம்
அடியில் பார்த்த
கோரைப்புல்லும்
குழியான மணல் திட்டும்
காகித கப்பலாய்
மிதக்க தொடங்கியது
தேங்கிய நினைவில்!
Saturday, July 25, 2009
Thursday, July 02, 2009
செல்போன் பொருத்தம்
ஜாதகம்
வருமானம்
அந்தஸ்து
தோற்றம் என
ஜோடிப் பொருத்தம் பல பார்த்து
முடிவு செய்த திருமணம்
நிச்சயித்த சில நாட்களிலேயே
தெரிய வந்தது
பார்க்காத பொருத்தம் ஒன்று!
சிரிப்பும் சிணுங்கலுமாய் தொடங்கிய
செல்போன் வார்த்தை பரிமாறல்கள்
சில நாட்களிலேயே
ஒவ்வாத அலைவரிசையை
ஒலி பெருக்கி காட்டிட
நீதிமன்ற படியேற
பின்னாளில் தேவையில்லாமல்
நிச்சயதார்த்தோடு நிறுத்தி வைத்த
செல்போன் புறாவை
நல்லதா கெட்டதா என
புரியாமல் பார்த்தனர்
மண மக்களின் பெற்றோர்!!
வருமானம்
அந்தஸ்து
தோற்றம் என
ஜோடிப் பொருத்தம் பல பார்த்து
முடிவு செய்த திருமணம்
நிச்சயித்த சில நாட்களிலேயே
தெரிய வந்தது
பார்க்காத பொருத்தம் ஒன்று!
சிரிப்பும் சிணுங்கலுமாய் தொடங்கிய
செல்போன் வார்த்தை பரிமாறல்கள்
சில நாட்களிலேயே
ஒவ்வாத அலைவரிசையை
ஒலி பெருக்கி காட்டிட
நீதிமன்ற படியேற
பின்னாளில் தேவையில்லாமல்
நிச்சயதார்த்தோடு நிறுத்தி வைத்த
செல்போன் புறாவை
நல்லதா கெட்டதா என
புரியாமல் பார்த்தனர்
மண மக்களின் பெற்றோர்!!
Subscribe to:
Posts (Atom)