Saturday, July 25, 2009

மழைச் சாரல்

சுட்டெரித்த சூரியன்
சூட்டிக் கொடுத்த
மாலை மலர
சுகந்தமாய் மதி
பணி தொடர்ந்த நேரம்!

கண் கெட்ட பின்
சூர்ய நமஸ்காரமாய்
காலம் கடந்து
தொடங்கிய நடைப் பயிற்சி
தொடர்ந்தேன் அன்று!

அண்டை அயல் பாரது
தன்னை மட்டும் பார்த்த
வேகப் பயணத்தில்
சட்டென முகத்தில்
பட்டது ஈரப் பதம்!

யாரின் எச்சில்
என அசூசையாய் நிமிர
சடசடவென சாரல் ...
கோவர்த்தனமாய்
குடை பிடிக்க கிட்டாத
அவலத் தனம்
ரசிக்கத் தொடங்கியது
தொப்பலாக்கிய மழையை!

நாளைய நகரின்
திரிவேணி சங்கமங்கள்
சாலையோரம்
சங்கடப் படுத்த
அவசரமாய்
வீட்டை அடைந்த மகிழ்ச்சி
அதற்குள்
நின்று விட்டிருந்தது
அன்றைய சாரல்!

எப்பொழுதோ
கடந்து சென்ற
ஆற்றுப் பாலம்
அடியில் பார்த்த
கோரைப்புல்லும்
குழியான மணல் திட்டும்
காகித கப்பலாய்
மிதக்க தொடங்கியது
தேங்கிய நினைவில்!

1 comment:

Nachu said...

பொடிப் பொடியாய் விழுந்த
சர்கரைத் தூரல்

விழிவிரித்து பார்க்கயிலும்
வந்தவழி காணல்

வேகமாய் முடிந்து விட்ட நடைபயிற்சி என்ற வேதனை தீர்க்க வந்த புத்துணர்ச்சி சாரல்

ரோமத்தில் மிதந்த தூறல்
கண்ணுக்குள் ஜில்லிப்பு

நாவில் விழுந்தவுடன்
நெஞ்சுக்குள் தித்திப்பு

கையில் குடையிருந்தும்
விரிக்க மனம் இருக்காது

நனைத்துதான் செல்லட்டுமே
தடையாயிங்கு குடையும் இருக்காது

வீட்டை அடைந்தது நின்றது அன்றைய சாரல்

நினைவுகளால் உம்மை துளிர் விட செய்தது அன்றைய சர்க்கரை தூறல்