Sunday, February 06, 2005

மற்றும் ஒரு ...

வரப் போகும்
வாரயிறுதியின்
கொண்டாட்ட நிகழ்ச்சி
வரவேற்ற அழைப்பிதழ்
வந்து நினைவில் ஆட

மறைத்து நின்ற
அலுவலக குப்பையை
அவசரமாக கொட்டி விட்டு
ஆனந்தமாக கிளம்பினேன்
வீடு நோக்கி.

அவசரம் புரியாமல்
ஆமையாய் நகர்ந்தது
அன்றைய போக்குவரத்து

அலை அலையாய்
மருத்துவ ஊர்திகள்
பறந்தன
அபாய மணியுடன்

வழிவிட்டு
விழிபார்த்து
ஒதுங்கி நின்றன
ஆமைக் கூட்டம்

வாரயிறுதி குதூகலம்
வடிந்து விட்ட
வருத்தத்தில்
சபித்தது மனம்
மோதிக் கொண்ட
வாகனங்களை


மிஞ்சியிருந்த
சந்தோஷத்தையும்
கிஞ்சித்தும்
விட்டு விட மனமில்லாமல்
சம்பவ இடத்தை
கடந்த போது
முகம் திருப்பி
முடுக்கினேன்

நாளைய நாளிதழில்
மற்றும் ஒரு செய்தி!
புள்ளி விவரத்தில்
மற்றும் ஒரு கூட்டல்!
அபாய வளைவு என்று
மற்றும் ஒரு அறிவிப்பு!
அவ்வளவு தான்
இது என்று
விரைந்தது வாகனம்
வீடு நோக்கி


வாசலில்
என் மற்றும் ஒரு வாகனத்தை
கண நேரம்
காணாத போதுதான்
பதறியது மனது
ஒரு கணம்.

சற்று தள்ளி
நிறுத்தி இருந்த
வாகனம்
தந்ததொரு பாடம்
இனி
ஒவ்வொரு முறையும்
சபிக்காது
சாந்தியடைய
பிரார்த்திக்கும்.

4 comments:

ஜெ. ராம்கி said...

கடினமான நடையாக இருந்தாலும் சொல்ல வந்த விஷயம் புரிகிறது. ஒரு பக்க கதை... கவிதையாக உருவெடுத்திருக்கிறதோ?

Mey said...

உண்மையான கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி "ரஜினி" ராம்கி.

வெறும் உணர்வுகளைப் பற்றியே கவிக்காமல் , சம்பவங்களை கவிதையாக(?) கொடுக்க செய்த முயற்சி இது.

Vanthiyathevan said...

அடுத்த பரிமாணத்தில் அடியெடுத்து வைத்த கவிதை. மிகவும் உணரும்படி இருந்தது. தொடர விண்ணப்பிக்கின்றேன்.

Anonymous said...

saw ur blog. nice. saw ur pix at yahoo! came 2 know that u work for microsoft. really cool! i am proud of u as an indian. really cool.

pls do visit my blog. thanx.