Saturday, June 05, 2004

பாசம்

தெருவோர
பிச்சைக்கார தாத்தாவின்
இறுதி ஊர்வலம்

தாரை தப்பட்டையுடன்
அமர்களமாய்...

தெருவே ஆச்சரியத்தில்
அதுவரை பார்த்திராத
அவரின் மகனைக் கண்டு..

அந்த
தெருவோர வங்கி
மேலாளரை தவிர...

9 comments:

Mookku Sundar said...

ஒண்ணுமே புரியலையே..??

ஒருவேளை நவீன கவிதையோ..??

Mey said...

தாத்தா பிச்சை எடுத்து Bank-ல் போட்டு வச்ச பணத்தை சொந்தம் கொண்டாட அதுவரை அவரை ஆதரிக்காத அவர் மகன் , ஆடம்பரமாய் இறுதி ஊர்வலத்தை நடத்துவதாய் பொருள்.

செய்யுளுக்கு பொருளுரை எழுதுவது மாதிரி விளக்க வேண்டியதா போச்சே!!!!!

குசும்பன் said...

அதாங்க நவீன கவிதை. ஆனா குப்ஸாமி சொல்ற மாரி இல்ல...டீடெயில்ஸ் மூக்கன் ஸாருக்குத் தெரியணுமே???

rajkumar said...

புரிவதில் பிரச்சனை இல்லை. இன்னும் சில வார்த்தைகளை குறைத்தால் அழுத்தம் அதிகரிக்கும்.

பிச்சைக்காரத் தாத்தாவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனியாக இருக்கும் தாத்தா, இதுவரை அவரை கவனிக்காத, அதனால் ஊரில் யாருக்கும் தெரியாத மகன். இறுதி ஊர்வலத்தில் அவ்ரை அறிந்த ஒரே நபராய் வங்கி மேனேஜர்.

இவற்றை இணைத்தாலே யதார்த்தமான கவிதை கிடைத்து விடுகிறது. பிச்சைக்காரன் அவசியமில்லை என்பது என்கருத்து.

Arun Vaidyanathan said...

I agree with Rajkumar..
The word 'Theruvoram's is not needed.
That too the word 'Theruvoram' repeats twice unnecessarily. Some times poems misfires...editing the poem again and again and removing the unnecessary words will yielg good poems. I did and still do these mistakes!

Mookku Sundar said...

ஆஹா..அருண்..கவிதை எழுத ஆரம்பிச்சிட்டிங்க ன்னு நினைச்சேன். கவிதையைப் பத்தி பேச வேற ஆரமிச்சிட்டிங்களா..??

போச்சு..கெட்ட காரியம் பண்ணாதீங்க..

Mey said...

கருத்துகளுக்கு நன்றி

குசும்பன் said...

paa raavin 9-kattaLaikaL padichIraa?

Mey said...

எங்கே பார்த்தாலும் ஒரே பாராயணமாய் இருக்கு.
ஒரு வேளை செய்யாதே என்றால் தான் செய்வார்கள் என்று சொல்லியிருப்பாரோ?